'' நீங்கள் கப்ருகளின் -மண்ணறைகளின்- மீது உட்காரவும் வேண்டாம் அதனை முன்னோக்கித் தொழவும் வே…
Islam > Ta > Hadith > இஸலமயஅடபபடக களக > '' நீங்கள் கப்ருகளின் -மண்ணறைகளின்- மீது உட்காரவும் வேண்டாம் அதனை முன்னோக்கித் தொழவும் வே…
ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: '' நீங்கள் கப்ருகளின் -மண்ணறைகளின்- மீது உட்காரவும் வேண…
عن أبي مَرْثَدٍ الغَنَوِيّ رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «لَا تَجْلِسُوا عَلَى الْقُبُورِ، وَلَا تُصَلُّوا إِلَيْهَا».
ஹதீஸ் விளக்கம்: '' நீங்கள் கப்ருகளின் -மண்ணறைகளின்- மீது உட்காரவும் வேண…
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கப்ரின் மீது உட்காருவதை- அமர்வதை-தடுத்தார்கள்.
அதே போன்று கப்ரை முன்னோக்கி –அதாவது தொழுபவரின் கிப்லாத் திசையில் கப்ரு இருக்கும் நிலையில்- தொழவேண்டாம் என்றும் தடுத்தார்கள். காரணம் இந்த விடயம் இணைவைப்பிற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்திட வாய்பிருப்பதால் இவ்வாறு செய்வதை தடுத்தார்கள்.
பாடங்கள்: '' நீங்கள் கப்ருகளின் -மண்ணறைகளின்- மீது உட்காரவும் வேண…
- அடக்கஸ்தளங்ளில் கப்ருகளின் மீதோ அல்லது அவற்றிற்கிடையிலோ அல்லது அதை நோக்கியோ, தொழுவது தடைசெய்யப்பட்டிருத்தல். ஆனால் நபிவழியில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று ஜனாஸாத் தொழுகை நடாத்த அனுமதியுண்டு.
- இணைவைப்பின் வாயில்களை அடைத்திட வேண்டும் என்பதற்காக அடக்கஸ்தளங்களில் தொழுவது தடைசெய்யப்பட்டிருத்தல்.
- இஸ்லாம் (கப்ருகள்)அடக்கஸ்தளங்கள் விடயத்தில் அளவு கடந்து செல்லுதல், அவமதித்தல் இரண்டையும் தடை செய்துள்ளது. எனவே இதில் எல்லை மீறுவதோ, அலட்சியமாக இருப்பதோ கூடாது.
- மரணித்தவரின் ஒரு எழும்பை முறிப்பது அவர் உயிரோடு இருக்கும் போது முறித்துவிடுவதைப் போன்றாகும் என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கூற்றுக்கு ஏற்ப மரணத்தின் பின்னும் முஸ்லிமின் புனிதத்துவம் பேணப்படுதல்.
பிரிவுகள் :
வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ்
· தொழுகை
· இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை
· பிக்ஹும் அதன் அடிப்படைகளும்
· தொழுகையின் நிபந்தனைகள்
· வல்லமையும் கீர்த்தியும் மிக்க அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொள்ளல்.
· வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம்
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
الله أكبر
Allah est le plus grand