அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை…

Islam > Ta > Hadith > இஸலமயஅடபபடக களக > அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை…

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்

சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர…

عن ابن عباس رضي الله عنهما عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ: قَالَ: «إِنَّ اللهَ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ، ثُمَّ بَيَّنَ ذَلِكَ، فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللهُ لَهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ، إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ، وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللهُ لَهُ سَيِّئَةً وَاحِدَةً».

ஹதீஸ் விளக்கம்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர…

அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் நிர்ணயித்து அதனை எவ்வாறு எழுத வேண்டும் என்பதை இரு மலக்குகளுக்கும் தெளிவுபடுத்திய விடயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ஹதீஸில் விவரிக்கிறார்கள் :

ஆகவே யார் நன்மை செய்ய விரும்பி அதனை செய்வதென உறுதிகொண்டு செய்யாவிட்டாலும் அவருக்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது. அவ்வாறு அதனை செய்துவிட்டால் அவருக்கு பத்திலிருந்து எழுநூறு மடங்காகவும் அதைவிட பல மடங்கு அதிகமாகவும் நன்மைகளை எழுதிவிடுகின்றான். இவ்வாறு நன்மைகள் பல மடங்காக அதிகரிப்பதென்பது அவரின் மனத்தூய்மை மற்றும் பிறருக்கு நன்மை விளைதல் என்ற அடிப்படையிலாகும்.

யார் தீமையொன்றை செய்ய நாடி அதனை செய்வதற்கு உறுதிகொண்டும் பின்னர் அல்லாஹ்வுக்காக அதனை விட்டு விட்டால் அதற்காக அவருக்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது. அதனை அவர் வேறு விடயங்களில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டதனால் அந்தத் தீமையை செய்வதற்கான எந்த காரியங்களையும் செய்யாதிருந்தால் அதற்காக அவருக்கு எதுவும் எழுப்படமாட்டாது. அவர் இயலாமையின் காரணமாக அதனை செய்யவதை விட்டுவிட்டால் அவரின் எண்ணத்திற்கான கூலி எழுதப்படுகிறது. அவ்வாறு நினைத்த அந்தத் தீமையை செய்துவிட்டால் அவருக்கு ஒரு தீமை எழுதப்படும்.

பாடங்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர…

பிரிவுகள் : இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை · வல்லமையும் கீர்த்தியும் மிக்க அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொள்ளல். · இறைதிருநாமங்கள் மற்றும் பண்புகளில் ஏகத்துவம்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.5 / 29.5
Illumination 97%
Nouvelle lune dans 13 jours
حسبنا الله ونعم الوكيل Allah nous suffit, quel excellent protecteur

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56