Islam > Ta > Hadith > பரரததனகள தகரகளன சடடஙகள > ஓர் மனிதர் தனது வீட்டினுள் நுழையும் போதும் உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு (பிஸ்மில்)…
சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureவீட்டினுள் நுழையும் போதும் சாப்பிட முன்பும் அல்லாஹ்வை நினைவு கூறுமாறு இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதாவது 'பிஸ்மில்லாஹ்' என்ற வார்த்தையை வீட்டினுள் நுழையும்போதும் உணவு உண்ண ஆரம்பிக்குபோதும் கூறினால், ஷைத்தான் தனது சகாக்களிடம் இந்த வீட்டுரிமைளார் அல்லாஹ்வை நினைவு கூறுவதன் மூலம் உங்களிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டான் ஆதலால் உங்களுக்கு இரவில் தங்குமிடமோ இரவு உணவோ கிடையாது என்று கூறுவான். அந்த மனிதர் தனது வீட்டினுள் நுழைகையிலும், உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூறாதிருந்தால் ஷைத்தான் தன சகாக்களுக்கு உங்களுக்கு இந்த விட்டில் தங்குவதற்கான இடமும், இரவுணவும் கிடைத்து விட்டது என அறிவிப்பான்.
பிரிவுகள் : பிரார்த்தனைகள் திக்ருகளின் சட்டங்கள் · திக்ரில் நபியவர்களின் வழிகாட்டல் · திக்ரின் பயன்கள் · வீட்டில் நுழையும் போதும் வீட்டிலிருந்து வெளியேறும் போதும் ஒத வேண்டிய திக்ருகள் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்