'அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரை துன்புறுத்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகி…

Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > 'அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரை துன்புறுத்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகி…

ஹதீஸ் அறிவிப்பவர்: இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்

சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: 'அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரை துன்புறுத்தல், கொலை…

عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: «الْكَبَائِرُ: الْإِشْرَاكُ بِاللهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَالْيَمِينُ الْغَمُوسُ».

ஹதீஸ் விளக்கம்: 'அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரை துன்புறுத்தல், கொலை…

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பெரும்பவாங்கள் பற்றி தெளிவுபடுத்துகிறார்கள்; அவற்றை செய்பவன் இம்மை அல்லது மறுமையில் கடுமையான எச்சரிக்கைக்கு உட்படுவான்.

அவற்றுள் முதலாவது : அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும் : இதன் கருத்து ; வணக்க வழிபாடுகளில் ஏதாவது ஒன்றை அல்லாஹ் அல்லாதவருக்கு செலுத்துதல், உலூஹிய்யா ருபூபிய்யா,அல்அஸ்மாஉ வஸ்ஸிபாத் -(அல்லாஹ்வின் அழகிய நாமங்களும் பண்புகளும்) போன்ற விடயங்களில் அல்லாஹ் தனக்கென தனித்துவமாக பெற்றிருக்கும் விடயங்களில் ஏதாவது ஒன்றை அல்லாஹ் அல்லாதோரும் பெற்றுள்ளனர் என சமப்படுத்துவதினை குறிக்கும்.

இரண்டாவது : ' பெற்றோரைத் துன்புறுத்துதல்

நோவினை செய்தல்': என்பது சொல் மற்றும் செயல் ரீதியான அனைத்து விடயங்கள் மூலமும் பெற்றோரை துன்புறுத்துவதையும் அவர்களுக்கு உபகாரம் செய்யாதிருத்தலையும் குறிக்கிறது.

மூன்றாவது : எவ்வித நியாயமான காரணமுமில்லாது அநியாயமாகவும், அத்துமீறியும் ஒருவரை கொலை செய்தல்.

நான்காவது : பொய் சத்தியம் என்பது ' பொய்யென்று தெரிந்துகொண்டே ஒரு விவகாரம் சம்பந்தமாக பொய்யாக சத்தியம் செய்தலைக் இது குறிக்கிறது. 'அல் யமீனுல் கமூஸ்' என இச்சத்தியம் அழைக்கப்படக் காரணம் குறித்த நபரை இந்த சத்தியமானது பாவத்தில் அல்லது நரகில் தள்ளிவிடுவதினலாகும்.

பாடங்கள்: 'அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரை துன்புறுத்தல், கொலை…

பிரிவுகள் : உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் · பாவங்களைக் கண்டித்தல் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

بسم الله الرحمن الرحيم mer. 16 Joumada 1
الأربعاء 16 جمادى الأولى
أحدب متناقص Gibbeuse Décroissante Jour 16.7 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
لا إله إلا الله Pas de divinité sauf Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56