'நன்மை என்பது நற்குணமாகும். பாவம் என்பது உனது உள்ளத்தில் குறுகுறுப்பை ஏற்படுத்தும். மக்கள்…

Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > 'நன்மை என்பது நற்குணமாகும். பாவம் என்பது உனது உள்ளத்தில் குறுகுறுப்பை ஏற்படுத்தும். மக்கள்…

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: 'நன்மை என்பது நற்குணமாகும். பாவம் என்பது உனது உள்ளத்தில…

عَنِ النَّوَّاسِ بْنِ سِمْعَانَ الْأَنْصَارِيِّ رضي الله عنه قَالَ: سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْبِرِّ وَالْإِثْمِ، فَقَالَ: «الْبِرُّ حُسْنُ الْخُلُقِ، وَالْإِثْمُ مَا حَاكَ فِي صَدْرِكَ، وَكَرِهْتَ أَنْ يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ».

ஹதீஸ் விளக்கம்: 'நன்மை என்பது நற்குணமாகும். பாவம் என்பது உனது உள்ளத்தில…

நன்மை மற்றும் பாவம் பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்ட போது, நபியவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள் :

நன்மைகளில் மிக மகத்தானது, அல்லாஹ்வுடன் இறையச்சம் பேணி நற்குணமாக நடப்பதும், படைப்புக்களுடன் நோவினைகளைச் சகித்தும், கோபத்தைக் குறைத்தும், முகமலர்ச்சியை வெளிப்படுத்தியும், நல்வார்த்தைகள் பேசியும், உறவுகளை சேர்ந்து நடந்தும், கட்டுப்பட்டும், மென்மையைக் கடைப்பிடித்தும், நல்ல முறையில் தோழமை கொண்டு சேர்ந்து நடந்தும் நற்குணம் பேணுவதுமாகும் என்று பதிலளித்தார்கள்.

பாவம் என்பது, உள்ளத்தில் தடுமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தும் ஒன்றாகும். உள்ளத்தில் அது பற்றிய சந்தேகம், அது பாவமாக இருக்கலாம் என்ற பயம் என்பவை இருக்கும். நல்ல மனிதர்களின் பார்வையில் அது அசிங்கமானதாக இருக்கும் என்பதால், அதை வெளிக்காட்டவும் விரும்பமாட்டீர்கள். ஏனெனில், மனித உள்ளம் இயல்பாகவே தனது நலவுகளை அடுத்தவர் பார்ப்பதை விரும்புகின்றது. எனவே அதன் ஒரு செயலை மனிதர்கள் பார்ப்பதை அது வெறுத்தால், அது ஒரு பாவம் என்றே அர்த்தமாகும்.

பாடங்கள்: 'நன்மை என்பது நற்குணமாகும். பாவம் என்பது உனது உள்ளத்தில…

பிரிவுகள் : நற்குணத்தின் சட்டதிட்டங்கள் · உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் · நற்குணங்கள் · உளச் செயற்பாடுகள் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.6 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
حسبنا الله ونعم الوكيل Allah nous suffit, quel excellent protecteur

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56