பிரார்த்தனையே (துஆவே) வணக்கமாகும்'

Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > பிரார்த்தனையே (துஆவே) வணக்கமாகும்'

ஹதீஸ் அறிவிப்பவர்: இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்

சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: பிரார்த்தனையே (துஆவே) வணக்கமாகும்'

عن النعمان بن بَشِير رضي الله عنه قال: سمعت النبيَّ صلى الله عليه وسلم يقول: «الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ»، ثُمَّ قَرَأَ: «{وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ} [غافر: 60]».

ஹதீஸ் விளக்கம்: பிரார்த்தனையே (துஆவே) வணக்கமாகும்'

பிரார்த்தனை வணக்கமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே அந்தப் பிரார்த்தனை அனைத்தும் அல்லாஹ்வுக்கென்று தூய்மையுடனும் இதயச்சத்துடனும் இருத்தல் வேண்டும். துஆவானது தேவையை முன்னிருத்திக் கேட்பதாகவோ, அல்லது கோரிக்கையொன்றை முன்னிருத்திக்கேட்பதாகவோ இருக்கலாம். அதாவது அல்லாஹ்விடம் அவனுக்கு பயனுள்ளதை தருமாறும், இம்மையிலும் மறுமையில் அவனுக்கு தீங்காக அமைபவற்றை விட்டும் பாதுகாக்குமாறும் வேண்டுவதாகும். அல்லது வணக்கம் எனும் பிரார்த்தனை அதாவது அல்லாஹ் விரும்பி திருப்தியடையக்கூடிய வெளிப்படையானதும் மறைமுகமானதுமான வார்த்தைகள் செயல்கள் மற்றும் உள்ளத்தால் அல்லது உடலால் அல்லது பணத்தால் செய்யக் கூடிய அனைத்தையும் குறிக்கும்.

பின்னர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இதற்கான ஆதாரமான பின்வரும் அல்லாஹ்வின் கூற்றை ஆதாரமாக குறிப்பட்டார்கள் : ''என்னை அழையுங்கள் நான் உங்களுக்கு பதிலளிப்பேன். எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடிக்கின்றார்களோ அவர்கள் இழிவடைந்தவர்களாக நரகத்தினுள் நுழைவார்கள்".

பாடங்கள்: பிரார்த்தனையே (துஆவே) வணக்கமாகும்'

பிரிவுகள் : சிறப்புகள் · பிரார்த்தனையின் சிறப்புகள் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.5 / 29.5
Illumination 97%
Nouvelle lune dans 13 jours
حسبنا الله ونعم الوكيل Allah nous suffit, quel excellent protecteur

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56