'உங்களுக்கப் பின்னர் நான் நான்கு வார்த்தைகளை, மூன்று தடவைகள் கூறினேன். அவற்றை நீங்கள் இன்ற…

Islam > Ta > Hadith > பரரததனகள தகரகளன சடடஙகள > 'உங்களுக்கப் பின்னர் நான் நான்கு வார்த்தைகளை, மூன்று தடவைகள் கூறினேன். அவற்றை நீங்கள் இன்ற…

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 2 min de lecture

ஹதீஸ் மூல உரை: 'உங்களுக்கப் பின்னர் நான் நான்கு வார்த்தைகளை, மூன்று தட…

ஹதீஸ் விளக்கம்: 'உங்களுக்கப் பின்னர் நான் நான்கு வார்த்தைகளை, மூன்று தட…

நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியாகிய, உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா (ரலி) அவர்களிடமிருந்து, ஸுபஹ் தொழுத பின்னர் காலைநேரத்தில் வெளிப்பட்டார்கள். அவர்கள் தொடர்ந்தும் தமது தொழுமிடத்தில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். பின்பு பகல் பொழுதை அடைந்த பின்னர், ழுஹாவுடைய நேரத்தில் நபியவர்கள் திரும்பி வந்தார்கள். அப்போதும் ஜுவைரிய்யா அவர்கள் அதே இடத்தில் அமர்ந்துகொண்டே இருந்தார்கள். அப்போது நபியவர்கள், 'நான் உங்களை விட்டுச் சென்ற அதே நிலையில் தானா தற்போதும் இருக்கின்றீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'ஆம்' என்றார்கள். அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : 'உங்களுக்கப் பின்னர் நான் நான்கு வார்த்தைகளை, மூன்று தடவைகள் மடக்கிக் கூறினேன். நன்மைகள் அடிப்படையில், நான் கூறியதை, நீங்கள் அமர்ந்திருந்த இந்த முழுநேரமும் கூறியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும் அவற்றை விட அதன் நன்மையே அதிகமாக இருக்கும். அல்லாஹ்வுடைய படைப்புகளின் (அவனால் மாத்திரமே எண்ணமுடியுமான) எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும் (அதாவது, தன்னுடைய அடியார்களில் தாந் பொருந்திக் கொண்டவர்களை பொருந்திக்கொள்ளச் செய்யும் அளவு. இது எம்மால் புரிந்துகொள்ளமுடியாத ஒன்றாகும்), அவனது (பிரமாண்டமான, பாரிய படைப்பாகிய) அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் (அல்லாஹ்வின் சொற்கள் அளவிட முடியாதவை, தீர்ந்து போகாதவை) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் என (அவன் அனைத்துக் குறைகளையும் விட்டுத் தூயவன் எனத்) துதிக்கிறேன். அளவிட முடியாதவை என்பது மேற்கூறிய மூன்று வகைகளையும் சாரும். அவனுடைய சொற்களின் எண்ணிக்கை மகத்துவத்திலும், பண்பிலும், எண்ணிக்கையிலும் அளவிட முடியாதது. ஆனாலும் இங்கு நாடப்படுவது எண்ணிக்கையை அதிகப்படுத்திக்காட்டுவதாகும். ஏனெனில், இங்கு முதலில் எண்ணி முடிக்க முடியுமான, படைப்புக்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. பின்பு அதைவிட மகத்தான ஒன்றை நோக்கிச் செல்லப்பட்டுள்ளது. அதுவே, அவன் உவக்கும் அளவு என்று கூறப்பட்டுள்ளது. பின்பு, படைப்புக்களிலேயே மிகப் பிரமாண்டமான அர்ஷின் எடையளவு கூறப்பட்டுள்ளது. முதலாவது, எண்ணிக்கை மற்றும் அளவீட்டுக்கு உரியது. இரண்டாவது, விதம் மற்றும் தன்மைக்கு உரியது. மூன்றாவது, பாரம் மற்றும் எடைக்கு உரியது.

பாடங்கள்: 'உங்களுக்கப் பின்னர் நான் நான்கு வார்த்தைகளை, மூன்று தட…

பிரிவுகள் : பிரார்த்தனைகள் திக்ருகளின் சட்டங்கள் · காலை மாலை திக்ருகள் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.6 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
حسبنا الله ونعم الوكيل Allah nous suffit, quel excellent protecteur

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56