இயற்கை மரபுகள் ஐந்தாகும் : விருத்தசேதனம் (கத்னா) செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைவது, …
Islam > Ta > Hadith > வணககவழபடடகள சமபநதமன பகஹ > இயற்கை மரபுகள் ஐந்தாகும் : விருத்தசேதனம் (கத்னா) செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைவது, …
ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: இயற்கை மரபுகள் ஐந்தாகும் : விருத்தசேதனம் (கத்னா) செய்வத…
ஹதீஸ் விளக்கம்: இயற்கை மரபுகள் ஐந்தாகும் : விருத்தசேதனம் (கத்னா) செய்வத…
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலும் மற்றும் நபிமார்களின் மரபுகளிலும் உள்ள ஐந்து விடயங்களை தெளிவுபடுத்துகிறார்கள்; அவை பின்வருமாறு :
முதலாவது : விருத்த சேதனம்; விருத்தசேதனம் என்பது ஆணுறுப்பின் மேல் பகுதியில் உள்ள தோலை கத்தரிவிடுதல். பெண் பிறப்புறுப்பில் உறவு கொள்ளும் இடத்திற்கு மேலே உள்ள பகுதியை நீக்கி விடுதல்.
இரண்டாவது: மர்ம உறுப்பின் மேலே உள்ள பகுதியில் காணப்படும் முடிகளை மழித்தல்.
மூன்றாவது: மீசையை கத்தரித்தல் -ஒட்ட வெட்டுதல்- அதாவது ஆணின் உதட்டின் மேல் பகுதி தெரியுமளவிற்கு மேல் உதட்டுப்பக்கத்தில் வளரும் முடிகளை கத்தரிப்பதை குறிக்கிறது.
நான்காவது : நகங்களை களைதல்.
ஐந்தாவது :அக்குள் முடிகளை களைதல்.
பாடங்கள்: இயற்கை மரபுகள் ஐந்தாகும் : விருத்தசேதனம் (கத்னா) செய்வத…
- அல்லாஹ்வின் தூதர்களின் இயற்கை மரபுகளை -வழிமுறைகளை அல்லாஹ் விரும்பி வரவேற்போதோடு அவற்றை கடைப்பிடித்து ஒழுகுமாறும் கட்டளையிடுகிறான். அவை யாவும் முழுமை, தூய்மை, அழகு போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது.
- இயற்கை மரபுகளில் அலட்சியம் கொள்ளாது பேணிநடப்பது மார்க்கம் வழிகாட்டிய விடயமாகும்.
- இவ்விடயங்களைக் கடைபிடிப்பதால் பலவிதமான ஆன்மீக, லௌகீக பயன்பாடுகள் உள்ளன. அழகிய தோற்றம், உடற்சுத்தம், ஆன்மீக சுத்தத்திற்கான பேணுதல், நிராகரிப்பாளர்களின் கலாச்சாரத்திற்கு மாறுசெய்தல், இறைக்கட்டளையை எடுத்து நடத்தல் போன்றன அவற்றுள் சிலதாகும்.
- வேறு அறிவிப்புகளில் -ஹதீஸ்களில்- இங்கே குறிப்பிடப்பட்ட ஐந்து விடயங்களுக்கு மேலதிகமாக தாடி வளர்த்தல், மிஸ்வாக் செய்தல் போன்ற இவை அல்லாத பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பிரிவுகள் :
வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ்
· சுத்தம்
· பிக்ஹும் அதன் அடிப்படைகளும்
· இயல்பாக பேணவேண்டிய சுன்னாக்கள்
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
أستغفر الله
Je demande pardon à Allah