'பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும…
Islam > Ta > Hadith > பகஹம அதன அடபபடகளம > 'பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும…
ஹதீஸ் அறிவிப்பவர்: இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: 'பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகி…
عن عبد الله بن عمرو رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: «لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ، وَلَكِنِ الْوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا».
ஹதீஸ் விளக்கம்: 'பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகி…
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் உறவுகளை சேர்ந்து நடப்பதிலும், உபகாரம் செய்வதிலும் பூரணமான மனிதன் யாரெனில் பதிலுக்குப் பதில் உபகாரத்தை எதிர்பாரக்கும் மனிதன் அல்ல. மாறாக உறவைப் பேணுவதில் உறவுகள் துண்டித்து நடந்தாலும் அவர்களுடன் சேர்ந்து நடப்பவனும், அல்லது அவர்கள் தன்னுடன் மோசமாக நடந்து கொண்டாலும் அதற்குப் பதிலாக அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்பவனே பூரண மனிதனாவான் என்று குறிப்பிடுகிறார்கள்
பாடங்கள்: 'பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகி…
- இஸ்லாமிய ஷரீஆவின் நிலைப்பாட்டில் உறவை பேணுதல் என்பது உம்மை உனது உறவுகள் துண்டித்து நடந்தாலும் அவர்களை சேர்ந்து நடப்பதும், உமக்கு அநியாயம் இழைத்தாலும் அதனை மன்னித்து விடுவதும், உமக்கு எதையும் கொடுக்காது விட்டாலும் நீ அவர்களுக்கு கொடுத்துதவுவதையுமே குறிக்கிறது. மாறாக அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறாரோ அதே போன்று பதிலுக்கு பதில் நடந்து கொள்வதை குறிக்கமாட்டாது.
- உறவுகளை சேர்ந்து நடப்பது என்பது அவர்களுக்கு தம்மால் இயலுமான நன்மையான விடயங்களை செய்வதாகும். அவைகளில். உறவுகளுக்கு பண உதவிகள் வழங்குதல், அவர்களுக்காக பிரார்த்தனை செய்தல் நன்மை ஏவி தீமையைத் தடுத்தல் இது போன்ற விடயங்களுடன் அவர்களுக்கு ஏற்படுகின்ற இன்னல்களிலிருந்து பாதுகாப்பதையும் குறிக்கும்.
பிரிவுகள் :
குடும்பவியல்
· முஸ்லிம் சமூகம்
· பிக்ஹும் அதன் அடிப்படைகளும்
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
لا إله إلا الله
Pas de divinité sauf Allah