நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு பர்ழான தொழுகை முடிந்ததும் பின்வருமாரு கூறக் கூ…

Islam > Ta > Hadith > பகஹம அதன அடபபடகளம > நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு பர்ழான தொழுகை முடிந்ததும் பின்வருமாரு கூறக் கூ…

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்

சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு பர்ழான தொழு…

عَنْ ‌وَرَّادٍ كَاتِبِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: أَمْلَى عَلَيَّ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ فِي كِتَابٍ إِلَى مُعَاوِيَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ: «لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ».

ஹதீஸ் விளக்கம்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு பர்ழான தொழு…

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு பர்ழான தொழுகையைத் தொடர்ந்து : 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லிஷைஇன் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதய்த்த வலா முஃதிய லிமா மனஃத்த வலா யன்ஃபஉ தல் ஜத்தி மின்கல் ஜத்து என கடமையான தொழுகைக்குப் பிறகு கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இந்த திக்ரின் கருத்து : லாஇலாஹ இல்லல்லாஹு என்ற ஏகத்துவ வார்த்தையை உளப்பூர்வமாக ஏற்று அங்கீகரிக்கிறேன். உண்மையான வணக்கம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியது என்று உறுதிப்படுத்துவதோடு, அவனைத் தவிர உள்ளவற்றிற்கு வழிபாடு எதுவும் இல்லை என்றும் கூறுகிறேன். எனவே உண்மையாக வணங்கப்பட வேண்டியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. உண்மையான அரசாட்சி அல்லாஹ்வுக்கே சொந்தமானது. வானங்கள் மற்றும் பூமியில் உள்ளோரின் அனைத்து புகழாரங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் எல்லாவற்றிலும் சக்தி படைத்தவனாக உள்ளான் எனவே அவன் நாடி கொடுத்தவற்றை அல்லது தடுத்தவற்றை எவராலும் தடுத்திட முடியாது. மேலும் செல்வந்தனின் செல்வம் மறுமையில் எவ்விதப்பயனையும் தரமாட்டாது அவனின் நல்லமல்கள் மாத்திரமே அவனுக்கு நற்பயனளிக்கும்.

பாடங்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு பர்ழான தொழு…

பிரிவுகள் : வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ் · தொழுகை · பிக்ஹும் அதன் அடிப்படைகளும் · தொழுகையில் ஓத வேண்டிய திக்ருகள்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.5 / 29.5
Illumination 97%
Nouvelle lune dans 13 jours
الله أكبر Allah est le plus grand

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56