உங்களில் ஒருவர் வுழூ செய்து, பின்னர் தனது காலுறைகளை அணிந்துகொண்டால், அவற்றுடனேயே தொழட்டும்…
Islam > Ta > Hadith > வணககவழபடடகள சமபநதமன பகஹ > உங்களில் ஒருவர் வுழூ செய்து, பின்னர் தனது காலுறைகளை அணிந்துகொண்டால், அவற்றுடனேயே தொழட்டும்…
ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் அத்தாரகுத்தனீ பதிவு செய்துள்ளார்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: உங்களில் ஒருவர் வுழூ செய்து, பின்னர் தனது காலுறைகளை அணி…
ஹதீஸ் விளக்கம்: உங்களில் ஒருவர் வுழூ செய்து, பின்னர் தனது காலுறைகளை அணி…
இங்கு நபியவர்கள், ஒரு முஸ்லிம் வுழூ செய்த பின்னர் தனது காலுறைகளை அணிந்து, அதற்குப் பின்னர் வுழூ முறிந்து மீண்டும் வுழூ செய்ய நாடினால், - அவர் விரும்பினால் - அவ்விரண்டின் மீதும் மஸ்ஹு செய்துவிட்டு, அவற்றுடனேயே தொழலாம் என்றும், குறிப்பிட்ட காலத்திற்கு அவற்றைக் கழற்றாமல் இருக்கலாம் என்றும் தெளிவுபடுத்துகின்றார்கள். ஆனால், அவருக்குக் குளிப்புக் கடமையாகவிட்டால், காலுறையைக் கழற்றிவிட்டுக் குளிக்கவேண்டும்.
பாடங்கள்: உங்களில் ஒருவர் வுழூ செய்து, பின்னர் தனது காலுறைகளை அணி…
- காலுறைகளை முழுமையான சுத்த (வுழூ) நிலையில் அணிந்தால் மாத்திரமே மஸ்ஹு செய்யலாம்.
- ஊரிலேயே இருப்பவர் ஒரு நாள் முழுவதும், பயணத்தில் இருப்பவர் மூன்று நாட்கள் முழுவதும் மஸ்ஹு செய்யலாம்.
- காலுறைகள் மீது மஸ்ஹு செய்வதென்பது, பெருந்தொடக்குக்கு அல்லாமல், சிறுதொடக்குக்கு மாத்திரம் குறிப்பானதாகும். பெருந்தொடக்கைப் பொறுத்தவரை மஸ்ஹு செய்யமுடியாது. மாறாக, காலுறைகளைக் கழற்றிவிட்டு, பாதங்களைக் கழுவுவது அவசியமாகும்.
- செருப்புக்கள், காலுறைகள் போன்றவை சுத்தமாக இருந்து, அவற்றால் பள்ளிவாசலுக்கோ, தொழுபவர்களுக்கோ தொந்தரவு இல்லாமல் இருக்கும் பட்சத்தில் - யூதர்களுக்கு மாறுசெய்யும் நோக்கில் - அவற்றுடன் தொழுவது விரும்பத்தக்கதாகும். ஆனால் விரிப்புக்கள் இடப்பட்டிருக்கும் பள்ளிவாசலில் அவ்வாறு தொழக்கூடாது.
- காலுறைகளில் மஸ்ஹு செய்வதென்பது, இந்த சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள இலகுபடுத்தல் சலுகைகளில் ஒன்றாகும்.
பிரிவுகள் :
வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ்
· சுத்தம்
· பிக்ஹும் அதன் அடிப்படைகளும்
· காலுரையில் தடவுதல்
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
سبحان الله وبحمده
Gloire et louange à Allah