Islam > Ta > Hadith > ஹதஸ ஹதஸ கலகள > 'எழுதவும்; என் ஆன்மா யாருடைய கையில் இருக்கிறதோ, இந்த வாயின் மூலம் உண்மையைத் தவிர வேறு எது…
சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعن عبدِ الله بن عمرو رضي الله عنهما قال: كنتُ أكتبُ كلَّ شيءٍ أسمعُه من رسولِ الله صلَّى الله عليه وسلم أُريدُ حفْظَه، فنهتْني قريشٌ، وقالوا: أتكْتبُ كلَّ شيءٍ تَسمَعُه من رسول الله صلَّى الله عليه وسلم، ورسولُ الله صلَّى الله عليه وسلم بَشَرٌ يتكلَّمُ في الغضَبِ والرِّضا؟ فأمسَكتُ عن الكتاب، فذكرتُ ذلك لرسول الله صلَّى الله عليه وسلم، فأومأ بإصبَعِه إلى فيه، فقال: «اكتُبْ، فوالذي نفسي بيدِه، ما يَخرُجُ منه إلا حقٌّ».
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து கேட்பவற்றை எழுத்து மூலம் பாதுகாப்பதற்காக பதிவு செய்துகொள்பவனாக இருந்தேன். அப்போது குறைஷியர்களில் சிலர் என்னை எழுத வேண்டாம் எனத்தடுத்துவிட்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சாதாரண நிலையிலும் கோபத்திலும் பேசும் ஒரு மனிதராவர், அவர்கள் சில வேளை தவறிழைக்கக் கூடும் எனக் கூற நான் எழுதுவதை நிறுத்திக்கொண்டேன்.
எனவே அவர்கள் கூறியதை நபி எஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கூறினேன். அதற்கு நபியவர்கள் தனது வாயை பெரும் விரலால் சுட்டிக்காட்டி எழுதுவீராக எனக் கூறிவிட்டு எனது ஆன்மா யாரின் கைவசம் உள்ளதோ அவனின் மீது சத்தியமாக கோபம் மற்றும் எல்லா நிலைகளிலும் இதிலிருந்து வெளிப்படும் அனைத்தும் சத்தியமாகும் எனக் கூறினார்கள்.
அல்லாஹ் தனது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறான்: 'அவர் மனோ இச்சைப்படி எதனையும் பேசுவதில்லை. அது அவருக்கு அறிவிக்கப்படும் வஹியைத் தவிர வேறுஎதுவுமில்லை' ( அந்நஜ்ம்: 3-4)
பிரிவுகள் : ஹதீஸ், ஹதீஸ் கலைகள் · இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை · சுன்னா சம்பந்தமான பொதுத்தலைப்புக்கள் · சுன்னாவின் முக்கியத்துவமும் மதிப்பும் · நபிமொழியைப் பதிவு செய்தல் · தூதர்கள் மீது விசுவாசம் கொள்ளல் · நம் தூதர் முஹம்மத் (ஸல்)