Islam > Ta > Hadith > அலகரஆனம அதன கலகளம > 'ஸூரா பகராவின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதினால் அதுவே அவனது பாதுகாப்பிற்குப் போதுமானதாகும…
சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعن أبي مسعود رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: «مَنْ قَرَأَ بِالْآيَتَيْنِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ فِي لَيْلَةٍ كَفَتَاهُ».
ஸூறா பகராவின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதியவரை அல்லாஹ் தீங்கு மற்றும் துரதிஷ்டவசமான விபத்து போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறான் என நபியவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள 'கபதாஹு' என்ற வாசகத்திற்கு பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அவை வருமாறு: இரவுத் தொழகைக்குப் பதிலாக இவ்விரு வசனங்களும் போதுமாகும். இரவில் ஓத வேண்டிய ஏனைய திக்ருகளுக்குப் பதிலாக இதுவொன்றே போதுமாகும். இரவுத் தொழுகையில் ஓத வேண்டிய அதி குறைந்த பட்ச அளவு இவ்விரு வசனங்களுடைய அளவாகும். குறிப்பிட்ட வார்த்தையானது மேற்கண்ட அனைத்து கருத்துக்களையும் உள்ளடக்கிக்கொள்ளவதற்கு வாய்ப்புண்டு.
பிரிவுகள் : அல்குர்ஆனும் அதன் கலைகளும் · அல்குர்ஆனின் சிறப்புக்கள் · பிரார்த்தனைகள் திக்ருகளின் சட்டங்கள் · காலை மாலை திக்ருகள் · அத்தியாயங்கள் மற்றும் வசனங்களின் சிறப்பு · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்