Islam > Ta > Hadith > அலகரஆனம அதன கலகளம > ''மக்களே, நிச்சயமாக அல்லாஹ் உங்களிடமிருந்து ஜாஹிலிய்யாவின் ஆணவத்தையும், முன்னோர்களைப் பற்ற…
சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعَنِ ابْنِ عُمَرَ رضي الله عنهما: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ يَوْمَ فَتْحِ مَكَّةَ، فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ اللهَ قَدْ أَذْهَبَ عَنْكُمْ عُبِّيَّةَ الْجَاهِلِيَّةِ وَتَعَاظُمَهَا بِآبَائِهَا، فَالنَّاسُ رَجُلَانِ: بَرٌّ تَقِيٌّ كَرِيمٌ عَلَى اللهِ، وَفَاجِرٌ شَقِيٌّ هَيِّنٌ عَلَى اللهِ، وَالنَّاسُ بَنُو آدَمَ، وَخَلَقَ اللهُ آدَمَ مِنْ تُرَابٍ، قَالَ اللهُ: {يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللهِ أَتْقَاكُمْ إِنَّ اللهَ عَلِيمٌ خَبِيرٌ} [الحجرات: 13]».
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்கா வெற்றிகொள்ளப்பட்ட தினத்தில் உரைநிகழ்த்தினார்கள், அதில் அவர்கள் : மக்களே நிச்சயமாக அல்லாஹ் ஜாஹிலிய்யக்கால ஆணவத்தையும், வீராப்புக்கொள்வதையும், தங்களின் மூதாதையர்களின் பெருமை பேசுவதையும் உங்களை விட்டும் அகற்றிவிட்டான். ஆகையால் மக்கள் இரு வகையினராவர்.
முதலாமவர் : அல்லாஹ்வுக்கு பணிந்து கட்டுப்பட்டு நடக்கும் நேர்மையான, பக்தியுள்ள முஃமின், இவர் மக்களிடத்தில் உயர்பரம்பரை மற்றும் உயர் குலத்தை சார்ந்தவாராக இல்லாது விட்டாலும் அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியத்திற்குரியவராவார்.
இரண்டாமவர் : ஒழுக்கக்கேடான அல்லாஹ்வை நிராகரித்த துஷ்டன், இவன் உயர் குலமும் புகழும் அதிகாரமும் மிக்கவனாக திகழ்ந்தாலும் அல்லாஹ்விடத்தில் அட்பமான மிகப்பரிதாபமானவனாகவே இருப்பான். இவனுக்கு எந்த மதிப்பும் கிடையாது.
மனிதர்கள் அனைவரும் ஆதமின் சந்ததியாவார்கள். அல்லாஹ் ஆதமை மண்ணிலிருந்து படைத்தான். ஆகவே எவரின் அசல் -அடிப்படை- மண்ணாக இருக்கிறதோ அவர் பெருமையடித்தல் தற்பெருமைக்கொள்ளல் போன்ற விடயங்களுக்கு அருகதையற்றவர். இதனை பின்வரும் அல்லாஹ்வின் கூற்று தெளிவுபடுத்துகிறது : 'மனிதர்களே, நாங்கள் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்து நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்காக கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக உங்களில் மிகவும் பயபக்கதியுடையவரே அல்லாஹ்வின் முன் உங்களில் மிகவும் கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன், நுட்பமானவன்'. (ஹுஜுராத் : 13).
பிரிவுகள் : அல்குர்ஆனும் அதன் கலைகளும் · அல்குர்ஆன் விளக்கவுரை · அல்லாஹ்வின் பக்கம் அழைத்தல் · இஸ்லாத்தின் சிறப்பும் சிறப்பம்சங்களும் · இஸ்லாமிய மார்க்கத்தின் பொதுமை · இஸ்லாத்தில் மனித உரிமைகள் · அழைப்புப் பணி · வசனங்களின் விரிவுரை