நீங்கள் சிறுநீரிலிருந்து சுத்தமாகிக் கொள்ளுங்கள். ஏனெனில் கப்ரில் பெரும்பான்மையான வேதனை அத…
Islam > Ta > Hadith > பகஹம அதன அடபபடகளம > நீங்கள் சிறுநீரிலிருந்து சுத்தமாகிக் கொள்ளுங்கள். ஏனெனில் கப்ரில் பெரும்பான்மையான வேதனை அத…
ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை அத்தாரகுத்தனீ பதிவு செய்துள்ளார்
ஸஹீஹானது-சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: நீங்கள் சிறுநீரிலிருந்து சுத்தமாகிக் கொள்ளுங்கள். ஏனெனி…
عن أبي هريرة رضي الله عنه مرفوعًا: «اسْتَنْزِهوا من البول؛ فإنَّ عامَّة عذاب القبر منه».
ஹதீஸ் விளக்கம்: நீங்கள் சிறுநீரிலிருந்து சுத்தமாகிக் கொள்ளுங்கள். ஏனெனி…
கப்ரில் இருக்கும் வேதனைக்கான காரணங்களில் ஒன்றை நபியவர்கள் எமக்கு விளக்குகின்றார்கள். அதுதான் பரவலாக உள்ள ஒரு விடயமாகும். அது சிறுநீர் கழித்ததும் முறையாக சுத்தம் செய்யாமையாகும்.
பாடங்கள்: நீங்கள் சிறுநீரிலிருந்து சுத்தமாகிக் கொள்ளுங்கள். ஏனெனி…
- சிறுநீர் கழிக்கும் போது தனது உடல், உடையில் பட்டுவிடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.
- அவ்வாறு பட்டாலும் அசுத்தமாகாமல் இருப்பதற்காக, பட்ட இடத்தை உடனடியாக கழுவிக் கொள்வது மிகச் சிறந்தது, தொழுகைக்குச் செல்லும் போதே சுத்தம் செய்வது கடமையாகின்றது.
- சிறுநீர் அசுத்தமானதாகும். உடலிலோ, உடையிலோ, இடத்திலோ பட்டால் அவ்விடம் அசுத்தமாகிவிடும், அதனுடன் தொழுகை செல்லுபடியாக மாட்டாது. ஏனெனில் அசுத்தங்களை நீக்குவது தொழுகையின் நிபந்தனைகளில் உள்ளவையாகும்.
- சிறுநீரிலிருந்து சுத்தமாகாமலிருப்பது பெரும்பாவங்களில் உள்ளதாகும்.
- கப்ரில் வேதனை உண்டு, இது அல்குர்ஆன், ஸுன்னா, அறிஞர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் உறுதியான விடயமாகும்.
- மறுமையில் கூலி வழங்கல் உண்டு. மறுமையின் முதற்படி கப்ருகளாகும். அவை ஒன்றோ சுவனப் பூஞ்சோலையாக அல்லது நரகின் படுகுழியாக இருக்கும்.
பிரிவுகள் :
வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ்
· சுத்தம்
· பிக்ஹும் அதன் அடிப்படைகளும்
· இயற்கை தேவைகள் நிறைவேற்றுவதன் ஒழுங்குகள்
بسم الله الرحمن الرحيم
mer. 16 Joumada 1
الأربعاء 16 جمادى الأولى
الله أكبر
Allah est le plus grand