நான், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'பாவங்களிலேயே மிகப் பெரியது எது?' என்று கேட்ட…

Islam > Ta > Hadith > இஸலமயஅடபபடக களக > நான், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'பாவங்களிலேயே மிகப் பெரியது எது?' என்று கேட்ட…

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்

சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: நான், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'பாவங்களில…

عَنْ عَبْدِ اللهِ بنِ مَسْعُودٍ رضي الله عنه قال: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الذَّنْبِ أَعْظَمُ عِنْدَ اللهِ؟ قَالَ: «أَنْ تَجْعَلَ لِلهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ» قُلْتُ: إِنَّ ذَلِكَ لَعَظِيمٌ، قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «وَأَنْ تَقْتُلَ وَلَدَكَ؛ تَخَافُ أَنْ يَطْعَمَ مَعَكَ» قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ».

ஹதீஸ் விளக்கம்: நான், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'பாவங்களில…

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் பாவங்களில் மிகப்பெரியது குறித்து வினவப்பட்டது; அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: பெரும்பாவங்களில் மிகவும் பெரியது பெரிய இணைவைப்பாகும். பெரிய இணையென்பது அல்லாஹ்வுக்கு அவனின் உலூஹிய்யாவிலும், ருபூபிய்யாவிலும், அவனுக்கேயுரிய பெயர்களிலும் பண்புகளிலும் நிகர் அல்லது உவமையான விடயங்களை ஏற்படுத்துவதாகும். இக்குற்றத்தை அல்லாஹ் தவ்பாவின் மூலம் மாத்திரமே மன்னிப்பான். இதே பாவத்தில் -இணைவைப்பில்- ஒருவர் மரணித்துவிட்டால் அவர் நிரந்தர நரகில் இருப்பார். இரண்டாவது : ஒருவர் தனது பிள்ளையை அவரோடு உணவைப் பங்குபோட்டு உண்ணும் என்ற பயத்தில் கொலை செய்வதாகும். ஓர் உயிரை கொலை செய்வது ஹராமாகும். அதுவே கொலைசெய்யப்பட்டவர், கொலையாளியின் உறவுக்காரராக இருந்தால் பாவத்தின் கொடூரம் இன்னும் அதிகமாகும். அதுவே அல்லாஹ் வாழ்வாதாரத்தின் வழியை இவரது வழியில் வைத்திருக்க, அதைத் துண்டிக்கும் நோக்கில் கொலை செய்தால் பாவத்தின் வீரியம் இன்னும் அதிகரிக்கும். பின்னர் தனது அயலவரின் மனைவியுடன் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகும். அதாவது அயலவரின் மனைவியை மயக்கி அவளை அடிபணிய வைத்து அவளுடன் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகும். விபச்சாரம் ஹராமாகும். அதுவே உபகாரம், நலவு செய்யுமாறும், நல்ல நட்புடன் இருக்குமாறும் மார்க்கம் உபதேசித்துள்ள அயலவரின் மனைவியுடன் இருந்தால் பாவத்தின் கனதி இன்னும் கடுமையாகும்.

பாடங்கள்: நான், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'பாவங்களில…

பிரிவுகள் : இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை · வல்லமையும் கீர்த்தியும் மிக்க அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொள்ளல். · பரிபாலித்தல் விடயத்தில் ஏகத்துவம்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.6 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
سبحان الله وبحمده Gloire et louange à Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56