'நட்சத்திர ஜோதிடக் கலையில் ஒரு பகுதியைக் கற்பவன் சூனியக் கலையில் ஒரு பகுதியைக் கற்றவனாவான்…
Islam > Ta > Hadith > இஸலமயஅடபபடக களக > 'நட்சத்திர ஜோதிடக் கலையில் ஒரு பகுதியைக் கற்பவன் சூனியக் கலையில் ஒரு பகுதியைக் கற்றவனாவான்…
ஹதீஸ் அறிவிப்பவர்: இமாம்களான அபூதாவுத், இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: 'நட்சத்திர ஜோதிடக் கலையில் ஒரு பகுதியைக் கற்பவன் சூனியக…
عن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: «من اقتبَسَ علْمًا مِنَ النُّجُومِ اقْتبَسَ شُعبَة مِن السِّحرِ، زادَ ما زادَ».
ஹதீஸ் விளக்கம்: 'நட்சத்திர ஜோதிடக் கலையில் ஒரு பகுதியைக் கற்பவன் சூனியக…
யார் நட்சத்திரம் மற்றும் கிரகங்களுடன் தொடர்பான ஜோதிடக் கலைகளைக் கற்று வானியல் இயக்கங்களையும் தோற்றங்களையும் மறைவுகளையும் பூமியில் நடைபெறும் நிகழ்வுளான ஒருவரின் இறப்பு மற்றும் பிறப்பு அல்லது ஆரோக்கியமின்மை போன்றவற்றுடன் ஒப்பிட்டு எதிர்காலத்தில் நடக்கவிருப்பவற்றை அனுமானித்து கூறும் செயற்பாடுகளை மேற்கொள்கிறாரோ அவர் சூனியத்தின் ஓரு பகுதியைக் கற்றவராவார். இதனை அதிகதிகமாக கற்றுக்கொள்பவர் சூனியத்தையும் அதிகதிகம் கற்றவராவார்.
பாடங்கள்: 'நட்சத்திர ஜோதிடக் கலையில் ஒரு பகுதியைக் கற்பவன் சூனியக…
- கிரகங்கள் மற்றும் நட்சத்திர நிலைமாற்றங்களை அனுமானித்து எதிர்காலத்ததை எதிர்வு கூறும் நட்சத்திர ஜோதிடம் தடைசெய்யப்பட்டுள்ளமை. ஏனெனில் இந்த விடயம் தனக்கு மறைவான அறிவு இருப்பதாக வாதிடும் ஒரு செயலாகும்.
- தடைசெய்யப்பட்ட நட்சத்திர ஜோதிடம் ஏகத்துவக் கொள்கைக்கு முரண்படும் சூனியத்தின் ஒரு வகையாகும்.ஆனால் திசைகள் மற்றும் கிப்லா போன்றவற்றை அறியவும், அல்லது பருவகாலங்கள் மற்றும் மாதங்களை தெரிந்து கொள்ளவும் நட்சத்திரங்களை அவதானிப்பதில் எவ்விதக் குற்றமுமில்லை. இது அனுமதிக்கப்பட்டதாகும்.
- நட்சத்திர ஜோதிடத்தை அதிகமாகக் கற்குமளவு சூனியத்தின் பல பிரிவுகளை கற்பதும் அதிகமாகின்றது.
- அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடும் நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதற்கான நோக்கங்கள் -பயன்கள் மூன்றாகும் அவையாவன: 1-வானத்திற்கான அலங்காரமாக காணப்படுகின்றமை. 2- பாதையை கண்டுப்பிடிப்பதற்கான அடையாளங்களாக அமைந்துள்ளமை. -3- ஷைத்தான்களுக்கான எறிகற்களாக காணப்படுகின்றமை.
பிரிவுகள் :
இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை
· பெயர்களும் தீர்ப்புகளும்
· இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றுபவை
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
لا حول ولا قوة إلا بالله
Pas de force ni de puissance sauf en Allah