நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் 'வங்குரோத்துக்காரன் 'முப்லிஸ்' என்றால் யார் தெரியுமா?
Islam > Ta > Hadith > நறகணததன சடடதடடஙகள > நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் 'வங்குரோத்துக்காரன் 'முப்லிஸ்' என்றால் யார் தெரியுமா?
ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் 'வங்குரோத்துக்காரன் 'முப்…
ஹதீஸ் விளக்கம்: நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் 'வங்குரோத்துக்காரன் 'முப்…
நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை தம் தோழர்களிடம், 'வங்குரோத்துக்காரன்; யார் என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'நம்மில் செல்வமோ சேமிப்புகளோ இல்லாதவர்கள் வங்குரோத்துக்காரர்களாக கருதப்படுகிறார்கள்' என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எனது உம்மத்தில் வங்குரோத்துக்காரன் (திவாலானவர்) என்பவர், மறுமை நாளில் தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற பல நல்ல செயல்களுடன் வருபவர் ஆவார்.' ஆனால் அவர் பலரை கெட்ட வார்த்தைகளால் அவதூறாகவும், அவமதித்தும் பேசியிருப்பார்;.பிறருடைய மானத்தை பங்கப் படுத்தியிருப்பார், பிறருடைய செல்வத்தை விழுங்கி அவர்களின் உரிமைகளை மறுத்திருப்பார், பிறருடைய இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்கு எதிராக அநீதி இழைத்திருப்பார், ஒருவரை அடித்து அவமானப்படுத்தியிருப்பார். இவ்வாறான ஒருவரின் நன்மைகள் அநீதிக்கு உள்ளானோருக்கு பகிர்ந்தளிக்கப்படும் பிறரின் உரிமை மீறலுக்கும் அநீதங்களுக்களுக்கான பிரதீயிடுகளும் நிறைவேற்றப்படும் முன்னர் அவரின் நன்மைகள் (நற்காரியங்ள்) முடிந்து விட்டால் அநீதிக்குட்பட்டோரின் தீமைகள் யாவும் அவரின் மீது சுமத்தப்பட்டு அநியாயக்காரர்களின் ஏட்டில் பதியப்பட்டு எந்த நன்மையுமில்லாதவராக பின்னர் அவர் நரகத்தில் தள்ளப்படுவார்.'
பாடங்கள்: நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் 'வங்குரோத்துக்காரன் 'முப்…
- தடுக்கப்பட்ட செயல்களை செய்வது கண்டிக்கப் பற்றிருத்தல். குறிப்பாக மக்களின் உடமைகள் மற்றும் மானுசீகமான உரிமைகள் தொடர்பான விடயங்களில் மிக அவதானமாக இருத்தல்.
- அடியார்களுக்கிடையிலான உரிமைகள் பேசித்தீர்த்தல் விட்டுக்கொடுத்தல் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதே அடிப்படையாகும். ஆனால் ஷிர்க் தவிர, அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியானுக்கும் இடையிலான கடமைகள் தொடர்பான விஷயங்களில் மன்னித்தல் என்பதே அடிப்படையாகும்.
- குறிப்பாக பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் தொடர்பான விவகாரங்களில் உரையாடலின் போது, கேட்பவரின் கவனத்தை ஈர்த்தல் மற்றும் அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
- உண்மையில் வங்குரோத்துக்காரர் (திவாலானவர்) யார் என்பதற்கான விளக்கம் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. உண்மையான வங்குரோத்து நிலை என்பது, ஒருவரால் அநீதிக்கு ஆளானவர்கள், மறுமை நாளில் தங்களுக்கு அநீதி இழைத்தோரின் நற்செயல்களை பெறுவதாகும்.
- மறுமை நாளில்,படைப்புகளுக்கு இடையேயான பழிவாங்கலின் போது, சிலரின் அனைத்து நன்மைகளும் பறிக்கப்படும்,இறுதியில், அவனிடம் எந்த நன்மையும் இல்லாத ஒரு நிலையை அவன் அடையக்கூடும்.
- அல்லாஹ் தனது படைப்புகளை கையாள்வது நீதி மற்றும் உண்மையின் அடிப்படையில் அமைந்துள்ளது.
பிரிவுகள் :
நற்குணத்தின் சட்டதிட்டங்கள்
· தீய குணங்கள்
· இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை
· சிறப்புக்களும் ஒழுக்கங்களும்
· இறுதி நாள் மீது விசுவாசம் கொள்ளுதல்
· மறுமை வாழ்வு
بسم الله الرحمن الرحيم
mer. 16 Joumada 1
الأربعاء 16 جمادى الأولى
اللهم صل على محمد
Ô Allah prie sur Muhammad