மறுமை நாளில் மக்கள் முன்னிலையில் அல்லாஹ் ஒரு மனிதனை விடுதலை செய்வான்

Islam > Ta > Hadith > இஸலமயஅடபபடக களக > மறுமை நாளில் மக்கள் முன்னிலையில் அல்லாஹ் ஒரு மனிதனை விடுதலை செய்வான்

ஹதீஸ் அறிவிப்பவர்: இமாம் திர்மிதி, இமாம் இப்னு மாஜா ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது

சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 2 min de lecture

ஹதீஸ் மூல உரை: மறுமை நாளில் மக்கள் முன்னிலையில் அல்லாஹ் ஒரு மனிதனை விட…

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ العَاصِ رضي الله عنهما قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللهَ سَيُخَلِّصُ رَجُلًا مِنْ أُمَّتِي عَلَى رُءُوسِ الْخَلَائِقِ يَوْمَ الْقِيَامَةِ، فَيَنْشُرُ عَلَيْهِ تِسْعَةً وَتِسْعِينَ سِجِلًّا، كُلُّ سِجِلٍّ مِثْلُ مَدِّ الْبَصَرِ، ثُمَّ يَقُولُ: أَتُنْكِرُ مِنْ هَذَا شَيْئًا؟ أَظَلَمَكَ كَتَبَتِي الْحَافِظُونَ؟ فَيَقُولُ: لَا يَا رَبِّ، فَيَقُولُ: أَفَلَكَ عُذْرٌ؟ فَيَقُولُ: لَا يَا رَبِّ، فَيَقُولُ: بَلَى إِنَّ لَكَ عِنْدَنَا حَسَنَةً، فَإِنَّهُ لَا ظُلْمَ عَلَيْكَ الْيَوْمَ، فَتُخْرَجُ بِطَاقَةٌ فِيهَا: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَيَقُولُ: احْضُرْ وَزْنَكَ، فَيَقُولُ: يَا رَبِّ مَا هَذِهِ الْبِطَاقَةُ مَعَ هَذِهِ السِّجِلَّاتِ؟ فَقَالَ: إِنَّكَ لَا تُظْلَمُ، قَالَ: فَتُوضَعُ السِّجِلَّاتُ فِي كِفَّةٍ، وَالْبِطَاقَةُ فِي كِفَّةٍ، فَطَاشَتِ السِّجِلَّاتُ، وَثَقُلَتِ الْبِطَاقَةُ، فَلَا يَثْقُلُ مَعَ اسْمِ اللهِ شَيْءٌ».

ஹதீஸ் விளக்கம்: மறுமை நாளில் மக்கள் முன்னிலையில் அல்லாஹ் ஒரு மனிதனை விட…

மறுமை நாளில் மக்கள் முன்னிலையில் தனது சமூகத்திலிருந்து ஒரு மனிதனை விசாரணைக்காக அழைத்து அவனிடம் 99 பதிவேடுகளை எடுத்துக்காட்டுவான், என நபி ஸல்லலல்லாஹு அலைஹிவஸல்லம் குறிப்பிடுகிறார்கள். பதிவேடு என்பது அந்த மனிதன் உலகில் செய்த தீய செயல்களின் ஏடுகளைக் குறிக்கும். ஓவ்வொரு பதிவேடும் பார்வை எட்டும் அளவுக்கு நீண்டதாக காணப்படும்;. பின்னர் அல்லாஹ் அந்த மனிதனைப்பார்த்து இந்தப் பதிவேடுகளில் எழுதப்பட்டவைகளில் ஒன்றையேனும் நீ மறுக்கிறாயா? எனக் கேட்பான். எழுத்தாளர்களான எனது வானவர்கள் உமக்கு அநியாயம் இழைத்துள்ளனரா? அதற்கு அந்த மனிதன் : எனது இரட்சகனே அவ்வாறில்லை என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் அந்த மனிதனிடம் உலகில் நீ செய்து முற்படுத்திய தீய செயல்களுக்கு மறதி அல்லது தவறு அல்லது அறியாமை போன்ற ஏதும் நியாயமான காரணங்கள் உண்டா? என்று கேட்பான். அதற்கு அந்த மனிதன் எனது இரட்சகனே அதற்கான எந்த நியாயமும் என்னிடத்தில் கிடையாது என்று கூறுவான். அப்போது அல்லாஹ் அவனைப்பார்த்து உண்மைதான்; உமக்கு எம்மிடம் நன்மை உண்டு எனவும் இன்றைய தினம் உமக்கு எந்த அநியாயமும் நிகழாது என்றும் கூறுவான். பிறகு சிறிய துண்டுச் சீட்டு (பதிவட்டை) ஒன்று எடுத்துக்காட்டப்படும்; அதில்" அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரஸுலுஹு" (உண்மையாக வணங்கப்படத்தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாறும் இல்லை என்று சாட்சி கூறுகிறேன். முஹம்மத் அவனின் அடியாரும் அவனின் தூதருமாவார் எனவும் சாட்சி கூறுகிறேன்) என்று எழுதப்பட்டிருக்கும். தொடர்ந்தும் அல்லாஹ் அந்த மனிதனைப்பார்த்து ' உனது செயலின் எடையை காட்டும் ' என்று கேட்பான். அதற்கு அந்த மனிதன் எனது இரட்சகனே! இந்தப்பதிவேடுகளின் நிறைக்கு இந்த பதிவட்டையின் நிறை நிகராகுமா? என மனிதன் ஆச்சரியமடைந்தவனாக கேட்பான். அதற்கு அல்லாஹ் ' உமக்கு எந்த அநியாயமும் நிகழ மாட்டாது' எனக் கூறுவான். பதிவேடுகள் ஒரு தட்டிலும் பதிவட்டை இன்னொரு தட்டிலும் வைக்கப்படும், அப்போது பதிவேடுகளின் தட்டு குறைந்து பதிவட்டை இருந்த தட்டு கனதியாகி அதன் எடை அதிகரித்து விடும் அப்போது அல்லாஹ் அந்த மனிதனின் பாவத்தை மன்னித்து விடுவான்.

பாடங்கள்: மறுமை நாளில் மக்கள் முன்னிலையில் அல்லாஹ் ஒரு மனிதனை விட…

பிரிவுகள் : சிறப்புகள் · ஏகத்துவத்தின் மகிமைகள் · இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை · சிறப்புக்களும் ஒழுக்கங்களும் · இறுதி நாள் மீது விசுவாசம் கொள்ளுதல்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.5 / 29.5
Illumination 97%
Nouvelle lune dans 13 jours
أستغفر الله Je demande pardon à Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56