நான்கு பண்புகள் உள்ளன. அவை எவரிடத்தில் உள்ளதோ அவர்; மிகத்தெளிவான நயவஞ்கராவார். இந்தப் பண்ப…

Islam > Ta > Hadith > இஸலமயஅடபபடக களக > நான்கு பண்புகள் உள்ளன. அவை எவரிடத்தில் உள்ளதோ அவர்; மிகத்தெளிவான நயவஞ்கராவார். இந்தப் பண்ப…

ஹதீஸ் அறிவிப்பவர்: இமாம்களான புஹாரி, முஸ்லிம் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்

சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: நான்கு பண்புகள் உள்ளன. அவை எவரிடத்தில் உள்ளதோ அவர்; மிக…

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رضي الله عنهما قال: قال رَسولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا، وَإِنْ كَانَتْ خَصْلَةٌ مِنْهُنَّ فِيهِ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا: مَنْ إِذَا حَدَّثَ كَذَبَ، وإِذَا وَعَدَ أَخْلَفَ، وإذَا خَاصَمَ فَجَرَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ».

ஹதீஸ் விளக்கம்: நான்கு பண்புகள் உள்ளன. அவை எவரிடத்தில் உள்ளதோ அவர்; மிக…

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நான்கு பண்புகள் குறித்து எச்சரித்துள்ளார்கள். அவை ஒரு முஸ்லிமிடம் காணப்படின் அப்பண்புகளின் காரணமாக நயவஞ்சகர்களுக்கு மிகவும் ஒப்பானவராக இருப்பார். பெரும்பாலும் இப்பண்புகள் யாரிடம் அதிகம் காணப்படுகிறதோ அவரின் நிலை நயவஞ்சகனை ஒத்த நிலையாகும். ஆனால் இப்பண்புகள் யாரிடம் அரிதாக காணப்படுகிறதோ அவர் இவ்வட்டத்தினுள் வரமாட்டார். அப்பண்புகளாவன:

முதலாவது: பேசினால் வலிந்து பொய் பேசுவான் அவனின் பேச்சில் உண்மை இருக்காது.

இரண்டாவது: ஒப்பந்தம் ஒன்றை செய்தால் அதனை நிறைவேற்றாது அதற்கு மோசடி செய்வான்.

மூன்றாவது: வாக்களித்தால் அதனை நிறைவேற்றாது அதற்கு மாறுசெய்வான்.

ஒருவருடன் சண்டை சச்சரிவில் ஈடுபட்டால் கடும் பகையை காட்டுவதோடு நேர்மை தவறி நடப்பதோடு, குறித்த நபருக்கு மறுப்புத் தெரிவிப்பதிலும் அவரின் கூற்றை பொய்யாக்குவதிலும் சூழ்ச்சி செய்து பொய்யையும் புரட்டையும் பேசுவான்.

நயவஞ்சகம் என்பது உள்ளிருப்பதற்கு மாற்றமாக வெளியே ஒன்றை செய்தல். இக்கருத்து இப்பண்புகளைப் பெற்றோரிடத்தில் காணப்படுகிறது. அவர் தன்னிடம் பேசுபவர், வாக்குறுதி அளிப்பவர், நம்பிக்கை வைப்பவர், வாதிடுபவர் மற்றும் உடன்படிக்கை செய்பவர்களிடம் நயவஞ்சகமாக நடந்து கொள்கிறார். மாறாக, நம்பிக்கையின்மையை மறைத்து இஸ்லாத்தை வெளிப்படுத்தும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறும் நயவஞ்சகர் அல்ல. இந்த குணாதிசயங்களில் ஒன்றைக் கொண்டவர் அதைக் கைவிடும் வரை நயவஞ்சகத்தின் பண்புகளைக் கொண்டுள்ளார்.

பாடங்கள்: நான்கு பண்புகள் உள்ளன. அவை எவரிடத்தில் உள்ளதோ அவர்; மிக…

பிரிவுகள் : உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் · இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை · பாவங்களைக் கண்டித்தல் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும் · பெயர்களும் தீர்ப்புகளும் · நயவஞ்சகம்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.6 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
الحمد لله Louange à Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56