அபூ உபைதா பஹ்ரெயினிலிருந்து கொண்டு வந்திருக்கும் பொருள் பற்றி நீங்கள் கேள்விபட்டிருப்பீர்க…

Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > அபூ உபைதா பஹ்ரெயினிலிருந்து கொண்டு வந்திருக்கும் பொருள் பற்றி நீங்கள் கேள்விபட்டிருப்பீர்க…

ஹதீஸ் அறிவிப்பவர்: இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

ஸஹீஹானது-சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: அபூ உபைதா பஹ்ரெயினிலிருந்து கொண்டு வந்திருக்கும் பொருள்…

عن عمرو بن عوف الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم بعث أبا عبيدة بن الجراح رضي الله عنه إلى البحرين يأتي بِجِزْيَتِهَا، فَقدِم بمالٍ من البحرين، فسمعت الأنصار بقدوم أبي عبيدة، فَوَافَوْا صلاة الفجر مع رسول الله صلى الله عليه وسلم فلما صلى رسول الله صلى الله عليه وسلم انصرف، فَتَعَرَّضُوا له، فتَبسَّم رسول الله صلى الله عليه وسلم حين رآهم، ثم قال: «أَظُنُّكُمْ سَمِعتم أن أبا عبيدة قَدِم بشيءٍ من البحرين؟» فقالوا: أجل، يا رسول الله، فقال: «أبشروا وأمِّلوا ما يَسُرُّكُم، فوالله ما الفَقرَ أخشى عليكم، ولكني أخَشى أن تُبْسَط الدنيا عليكم كما بُسِطَت على من كان قبلكم، فتَنَافسوها كما تَنَافسوها، فَتُهْلِكَكُم كما أهْلَكَتْهُمْ».

ஹதீஸ் விளக்கம்: அபூ உபைதா பஹ்ரெயினிலிருந்து கொண்டு வந்திருக்கும் பொருள்…

ஹதீஸ் விளக்கம்:ரஸூல் (ஸல்) அவர்கள் பஹ்ரெயின் வாசிகளிடமிருந்து ஜிஸ்யா வரியை அறவிட்டு வர அபூ உபைதா (ரழி) அவர்களை அனுப்பினார்கள்.அவர் அங்கிருந்து மதீனாவுக்கு வந்ததும்,அதனைக் கேள்வி பட்ட அன்ஸாரிகள் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து பஜ்ருத் தொழுகையில் அவருடன் இணைந்து கொண்டனர். அப்போது நபியவர்கள் தொழுகை முடிந்து திரும்பிய போது அங்கு எடுத்து வரப்பட்டுள்ள செல்வத்தைப் பார்வையிட வந்திருந்த அன்ஸாரிளைப் பார்த்துப் புன்முறுவல் செய்தார்கள்.பின்னர் அவர்களிடம்"பஹ்ரெயினிலிருந்து அபூ உபைதா வந்திருப்பதை நீங்கள் கேள்விபட்டுள்ளீர்கள் போலும்"என்றார்கள்.அதற்கு அவர்கள், "ஆம் அல்லாஹ்வின் தூதரே! அதனை நாம் கேள்விபட்டோம். எனவே நமது பங்கைப் பெற்றுக் கொள்ள வந்துள்ளோம்." என்றனர்.எனவே அவர்களுக்கு மகிழ்வைத் தரும்படியான செய்தியைக் கொண்டு அவர்களுக்கு ரஸூல் (ஸல்) அவர்கள் சுபமங்களம் தெரிவித்தார்கள்.மேலும் அவர்களிடம் நபியவர்கள்,செல்வந்தனை விட உண்மைக்கு மிக சமீபமானவன் ஏழை என்றபடியால் அவர்களுக்கு வறுமை உண்டாவதையிட்டுத் தான் அஞ்சவில்லை. எனினும் உலகம் அவர்களுக்குத் திறந்து கொடுக்கப்பட்டு, அதில் அவர்கள் சிக்கி விடுவதையே தான் அஞ்சுவதாகக் கூறினார்கள்.ஏனெனில் அப்பொழுது மனிதனுக்குக் கிடைப்பது போதாமல் ஆகிவிடும்.எனவே மென்மேலும் அதிகம் அடைய வேண்டுமென்பதை அவன் விரும்புவான். எனவே ஹலால்,ஹராம் என்பதைப் பற்றி பொருட்படுத்தாமல் எந்த வழியிலேனும் பொருளீட்ட அவன் முயலுவான்.எனவே உலகின் பால் ஈர்த்துச் செல்கின்ற,மறு உலகை விட்டும் தூரமாக்கும் படியான இந்த இழிவான போட்டி நிகழும் போது அதன் மூலம் அவர்களுக்கு முந்திய சமூகத்தினர் அழிந்து போனது போன்று அவர்களும் அழிந்து போவார்கள்.என்பதே ரஸூல் (ஸல்) அவர்களின் மனவருத்தமாக இருந்தது.

பிரிவுகள் : உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் · உலக மோகத்தைக் கண்டித்தல் · நபியவர்களின் வாழ்க்கை வரலாறு · நபியவர்களின் நேரக வர்ணனை · சிறப்புக்களும் ஒழுக்கங்களும் · பண்பாடு · நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் இரக்கம் · நபியவர்களின் வாழ்க்கையும் வரலாறும்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.6 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
سبحان الله Gloire à Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56