உங்களில் யாராவது ஜும்ஆவுக்காக வருவதாக இருந்தால், குளித்துக்கொள்ளட்டும்
Islam > Ta > Hadith > வணககவழபடடகள சமபநதமன பகஹ > உங்களில் யாராவது ஜும்ஆவுக்காக வருவதாக இருந்தால், குளித்துக்கொள்ளட்டும்
ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: உங்களில் யாராவது ஜும்ஆவுக்காக வருவதாக இருந்தால், குளித்…
ஹதீஸ் விளக்கம்: உங்களில் யாராவது ஜும்ஆவுக்காக வருவதாக இருந்தால், குளித்…
யாராவது ஜும்ஆத் தொழுகைக்காக வர நாடினால், கடமையான குளிப்பைப் போல குளித்துக்கொள்வது அவருக்கு ஸுன்னாவாகும் என்பதை நபியவர்கள் இங்கு உறுதிப் படுத்துகின்றார்கள்
பாடங்கள்: உங்களில் யாராவது ஜும்ஆவுக்காக வருவதாக இருந்தால், குளித்…
- ஜும்ஆக் குளிப்பை வலியுறுத்தல். அது ஜும்ஆத் தினத்தில் ஒரு முஃமின் செய்யவேண்டிய ஒரு ஸுன்னா என்றும், தொழுகைக்காக வெளிக்கிளம்ப சற்றுமுன்னர் குளிக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தல்.
- சுத்தம் மற்றும் நறுமணத்தைப் பேணுவது ஒரு முஸ்லிமின் ஒழுக்கப்பண்பாடுகளில் உள்ளதாகும். மக்களை சந்தித்து, அவர்களுடன் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பங்களில், அதிலும் குறிப்பாக, ஜும்ஆ மற்றும் ஜமாஅத் தொழுகைகளின் போது இது மேலும் வலியுறுத்தப்படும்.
- இந்த ஹதீஸில் ஏவப்படுபவர்கள் ஜும்ஆத் தொழுகை நிறைவேற்றுவது கடமையானவர்களே! ஏனெனில், அவர்கள் தான் ஜும்ஆவுக்காக வருகை தருபவர்கள்.
- ஜும்ஆவுக்காக வருபவர் சுத்தமாக இருப்பது விரும்பத்தக்கது. எனவே, உடம்பில் உள்ள துர்வாடைகள் நீங்குமளவு குளித்து, நறுமணம் பூசிக்கொள்வார். அவர் வுழு மாத்திரம் செய்தாலும் நிறைவேறும்.
பிரிவுகள் :
வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ்
· சுத்தம்
· தொழுகை
· பிக்ஹும் அதன் அடிப்படைகளும்
· குளிப்பு
· ஜும்ஆ தொழுகை
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
حسبنا الله ونعم الوكيل
Allah nous suffit, quel excellent protecteur