'நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் மிகப் பொருத்தமானது உங்கள் மனைவியரின் கற்பை ஹலாலாக…
Islam > Ta > Hadith > பகஹம அதன அடபபடகளம > 'நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் மிகப் பொருத்தமானது உங்கள் மனைவியரின் கற்பை ஹலாலாக…
ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: 'நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் மிகப் பொருத்தம…
عن عقبة بن عامر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «أَحَقُّ الشُّرُوطِ أَنْ تُوفُوا بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ».
ஹதீஸ் விளக்கம்: 'நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் மிகப் பொருத்தம…
நிறைவேற்றப்படுவதற்கு மிகவும் தகுதியானதும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதுமான நிபந்தனைகளுள் ஒரு பெண்ணை மனைவியாக அனுபவிப்பதை அனுமதிக்க காரணமாக அமைந்துள்ள நிபந்தனையே என நபியவர்கள் இந்த ஹதீஸில் தெளிவு படுத்துகிறார்கள். இங்கு நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிபந்தனையாவது ஒரு பெண் திருமண ஓப்பந்தத்தின் போது கோரும் அனுமதிக்கப்பட்ட நிபந்தனைகளையே குறிக்கும்.
பாடங்கள்: 'நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் மிகப் பொருத்தம…
- கனவன் மனைவி தரப்பில் இடப்படும் நிபந்தனைகளை நிறைவேற்றுவது அவசியமாகும். ஆனால் அந்த நிபந்தனைகள் அனுமதிக்கப்பட்ட ஹலாலான ஒன்றை ஹராமாக்குவதோ அல்லது ஹராமான ஒன்றை ஹலாலாக்குவதாகவோ அமைவது கூடாது.
- ஏனைய நிபந்தனைகளை விட திருமண நிபந்தனைகளை நிறைவேற்றுவது மிக வலியுறுத்தப்படுகின்றது. ஏனெனில் இது மனைவியை ஹலாலாக்கிக் கொள்வதற்குப் பதிலாக இடப்படும் நிபந்தனையாகும்.
- திருமணத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவது வலியுறுத்தப்பட்டிருப்பது, இஸ்லாம் திருமணத்திற்கு வழங்கியிருக்கும் உயர் அந்தஸ்தை பிரதிபளிக்கிறது.
பிரிவுகள் :
குடும்பவியல்
· திருமணம்
· பிக்ஹும் அதன் அடிப்படைகளும்
· திருமணத்தில் இடப்படும் நிபந்தனைகள்
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
أستغفر الله
Je demande pardon à Allah