அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது தம்தோல்களுக்கு…
Islam > Ta > Hadith > பகஹம அதன அடபபடகளம > அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது தம்தோல்களுக்கு…
ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழு…
عَن ابْنِ عُمَرَ رضي الله عنهما: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، رَفَعَهُمَا كَذَلِكَ أَيْضًا، وَقَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الحَمْدُ»، وَكَانَ لاَ يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ.
ஹதீஸ் விளக்கம்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழு…
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையின் போது மூன்று நிலைகளில் தோல்பட்டைக்கு நேராக தனது இரு கைகளையும் உயர்த்தக்கூடியவர்களாக இருந்தார்கள். அதாவது:தோள்பட்டை என்பது மூட்டுக்கும் கைக்கும் இடைப்பட்ட பகுதி.
முதலாவது இடம் : தொழுகையின் ஆரம்பத் தக்பீரான இஹ்ராம் தக்பீர் கூறுகையில்.
இரண்டாவது இடம் : ருகூஉ செய்ய தக்பிர் கூறும் போது ,
மூன்றாவது : ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, 'ஸமிஅல்லாஹுலிமன்ஹமிதஹ் ரப்பனா வலகல் ஹம்த்' என்று கூறும் போது. பொருள் : தன்னைப் புகழ்ந்தவனின் புகழுரையை அல்லாஹ் செவிமடுத்தான். எங்கள் இரட்சகனே புகழனைத்தும் உனக்கே உரியது.
ஸஜ்தாவைத் தொடங்கும்போதோ அல்லது அதிலிருந்து எழும்போதோ நபியவர்கள் கைகளை உயர்த்தமாட்டார்கள்.
பாடங்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழு…
- தொழுகையில் கைகளை உயர்த்துவதன் யதார்த்தம் என்னவென்றால், அது உண்மையில் தொழுகைக்கு அலங்காரமாகவும், தூயவனான அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்துவதாகவும் இருக்கிறது.
- நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் கைகளை உயர்த்திய இடங்களில் நான்காவது இடமும்; குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அபு ஹுமைத்; அஸ்ஸாஇதி அவர்கள் அறவித்துள்ளார்கள், இந்த ஹதீஸை அபூ தாவூத் உட்பட மற்றும் பலர் பதிவு செய்துள்ளனர். அதாவது மூன்று ரக்அத் மற்றும் நான்கு ரக்அத் தொழுகைகளில் முதல் தஷஹ்ஹுத் ஓதிய பின் நிலைக்கு வரும்போதாகும்.
- நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரண்டு கைகளையும் இரு காதுகளுக்கும் படாது நேராக உயர்த்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புஹாரி மற்றும் முஸ்லிமில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு அறிவிப்பில் மாலிக் இப்னு ஹுவைரிஸ் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர்கள் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தக்பீர் கூறும் போது தம் கைகளை காதுகளுக்கு இணையாக –நேராக உயர்த்தினார்கள் என இடம்பெற்றுள்ளது.
- 'ஸமிஅல்லாஹு லிமான் ஹமிதா' என்று ஜமாஅத் தொழுகையின் போது இமாம் மட்டுமே கூறுவார். அதனைத் தொடர்ந்து மஃமூம்கள் 'ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறுவார்கள். தனித்துத் தொழுபவர் ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதஹ் என்றும் ரப்பனாவலகல் ஹம்து என்ற இரண்டையும் கூறவேண்டும்.
- ருகூவிற்குப் பிறகு 'ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறும் நான்கு முறைகள் ஸஹீஹான ஹதிஸ்களில் இடம்பெற்றுள்ளது.அவைகளில் மேலே குறிப்பிடப்பட்டது ஒரு வடிவமாகும். இம்முறைகளில் ஒரு வடிவத்தை மாத்திரம் கூறாது ஏனையவைகளையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஓதுவது மிகவும் சிறந்தது.
பிரிவுகள் :
வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ்
· தொழுகை
· பிக்ஹும் அதன் அடிப்படைகளும்
· தொழும் முறை
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
سبحان الله وبحمده
Gloire et louange à Allah