Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > 'ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும் : ஸலாத்திற்கு பதிலுரை…
சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلَامِ، وَعِيَادَةُ الْمَرِيضِ، وَاتِّبَاعُ الْجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ الْعَاطِسِ».
இந்நபிமொழியில் ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய சில கடமைகள் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவுபடுத்துகிறார்கள். அந்தக்கடமைகளுள் முதலாவது ஒருவர் உமக்கு ஸலாம் கூறினால் அவருக்கு பதிலளித்தல் ஆகும்.
இரண்டாவது கடமை: நோயாளியை சுகம் விசாரித்தல்.
மூன்றாவது கடமை: ஜனாஸாவை வீட்டிருந்து தொழுமிடம் வரைக்கும்,தொழுமிடத்திலிருந்து அவரை அடக்கம் செய்யவதற்காக மக்பரா –அடக்கஸ்தளம் வரை பின்தொடரந்து செல்லுதல்.
நான்காவது கடமை : ஒருவர் வலீமா,மற்றும் வலீமா அல்லாத நிகழ்வுக்கு அழைப்பு விடுத்தால் அதற்கு பதில்அளித்தல்.
ஐந்தாவது கடமை : தும்மியவருக்கு பதிலளித்தல். அதாவது தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் அதனைக் செவிமடுத்தவர் யர்ஹமுகல்லாஹ் என்று கூறவேண்டும். அதற்கு தும்மியவர் யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு பாலகும் என்று கூற வேண்டும்.
பிரிவுகள் : மார்க்க ஒழுங்குகள் · ஸலாம் கூறி அனுமதி பெறுவதன் ஒழுங்குகள் · தும்மல் மற்றும் கொட்டாவியின் ஒழுங்குகள் · நோய் விசாரிப்பதன் ஒழுங்குகள் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்