Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > நீர் எங்கிருந்த போதிலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! ஒரு பாவத்திற்குப் பின்னர் ஒரு நன்மை செய்து…
இது நம்பகமானது (ஸஹன்) என இமாம் திர்மிதி கூறியுள்ளார்Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعَنْ أَبِي ذَرٍّ، جُنْدُبِ بْنِ جُنَادَةَ، وَأَبِي عَبْدِ الرَّحْمَنِ، مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اتَّقِ اللَّهَ حَيْثُمَا كُنْت، وَأَتْبِعْ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا، وَخَالِقْ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ».
இங்கு நபியவர்கள் மூன்று விடயங்களைக் கொண்டு ஏவுகின்றார்கள் : முதலாவது : இறையச்சம். அதாவது, கடமைகளைப் பேணிச் செய்வதுடன், எல்லா இடங்களிலும், காலங்களிலும், நிலைகளிலும், இரகசியத்திலும், வெளிப்படையிலும், ஆரோக்கியத்திலும், சோதனையிலும் பாவங்களைத் தவிர்த்தல். இரண்டாவது : ஏதாவதொரு பாவத்தை செய்துவிட்டால், அதற்குப் பின்னர், தொழுகை, தர்மம், உபகாரம், உறவுகளை சேர்ந்து நடத்தல், தவ்பா போன்ற நன்மைகளை செய்துவிடல். அவை அப்பாவத்தை அழித்துவிடும். மூன்றாவது : மக்களோடு, அவர்களது முகத்தில் புன்னகைத்தல், மென்மையாக நடந்துகொள்ளல், உபகாரம் புரிதல், நோவினைகளைத் தடுத்தல் போன்ற நற்குணங்களுடன் நடந்துகொள்ளுங்கள்.
பிரிவுகள் : நற்குணத்தின் சட்டதிட்டங்கள் · நற்குணங்கள் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்