Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > உங்களில் நற்பண்புடையவர் உங்களில் மிகவும் சிறந்தவர்'என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்'
சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعن عبد الله بن عمرو رضي الله عنهما قال: لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا وَلَا مُتَفَحِّشًا، وَكَانَ يَقُولُ: «إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلَاقًا».
கெட்ட, அசிங்கமான பேச்சுக்கள் பேசுதல், தீய, அசிங்கமான செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பண்பாட்டில் இருக்கவில்லை, அத்துடன் அதன் மீது நாட்டம் கொண்டவர்களாகவ, அதனை மனம் விரும்பி செய்யக் கூடியவர்களாகவோ இருக்கவுமில்லை. மாறாக அவர்கள் மகத்தான நற்பண்புடையவராகவே இருந்தார்கள்.
உங்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் உங்களில் நற்பண்பு மிக்கவரே என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். நற்பண்புகள் என்பது நன்மையான விடயங்களை செய்தல், புண்முறுவல் பூத்தல், தீங்கை (கொடுமைகளை) தடுத்தல், அதில் எதிர்ப்படும் சிரமங்களை தாங்கிக்கொள்ளல், நல்ல விடயங்களில் மக்களுடன் ஒன்றாக இருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
பிரிவுகள் : நற்குணத்தின் சட்டதிட்டங்கள் · நற்குணங்கள் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்