அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது தம்தோல்களுக்கு…

Islam > Ta > Hadith > பகஹம அதன அடபபடகளம > அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது தம்தோல்களுக்கு…

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்

சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழு…

عَن ابْنِ عُمَرَ رضي الله عنهما: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، رَفَعَهُمَا كَذَلِكَ أَيْضًا، وَقَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الحَمْدُ»، وَكَانَ لاَ يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ.

ஹதீஸ் விளக்கம்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழு…

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையின் போது மூன்று நிலைகளில் தோல்பட்டைக்கு நேராக தனது இரு கைகளையும் உயர்த்தக்கூடியவர்களாக இருந்தார்கள். அதாவது:தோள்பட்டை என்பது மூட்டுக்கும் கைக்கும் இடைப்பட்ட பகுதி.

முதலாவது இடம் : தொழுகையின் ஆரம்பத் தக்பீரான இஹ்ராம் தக்பீர் கூறுகையில்.

இரண்டாவது இடம் : ருகூஉ செய்ய தக்பிர் கூறும் போது ,

மூன்றாவது : ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, 'ஸமிஅல்லாஹுலிமன்ஹமிதஹ் ரப்பனா வலகல் ஹம்த்' என்று கூறும் போது. பொருள் : தன்னைப் புகழ்ந்தவனின் புகழுரையை அல்லாஹ் செவிமடுத்தான். எங்கள் இரட்சகனே புகழனைத்தும் உனக்கே உரியது.

ஸஜ்தாவைத் தொடங்கும்போதோ அல்லது அதிலிருந்து எழும்போதோ நபியவர்கள் கைகளை உயர்த்தமாட்டார்கள்.

பாடங்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழு…

பிரிவுகள் : வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ் · தொழுகை · பிக்ஹும் அதன் அடிப்படைகளும் · தொழும் முறை

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.5 / 29.5
Illumination 97%
Nouvelle lune dans 13 jours
سبحان الله وبحمده Gloire et louange à Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56