Islam > Ta > Hadith > இஸலமயஅடபபடக களக > 'இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்ப…
சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ، أَنُؤَاخَذُ بِمَا عَمِلْنَا فِي الْجَاهِلِيَّةِ؟ قَالَ: «مَنْ أَحْسَنَ فِي الْإِسْلَامِ لَمْ يُؤَاخَذْ بِمَا عَمِلَ فِي الْجَاهِلِيَّةِ، وَمَنْ أَسَاءَ فِي الْإِسْلَامِ أُخِذَ بِالْأَوَّلِ وَالْآخِرِ».
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஸ்லாத்தினுள் (இஸ்லாம் மார்க்கத்தை ஏற்பதன்) நுழைவதன் சிறப்பை இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். இஸ்லாத்தை தழுவிய ஒருவர் இஸ்லாத்தை சிறப்பான முறையில் கடைப்பிடித்தொழுகி, அல்லாஹ்வை மாத்திரம் நோக்காக்கொண்டு கலப்பற்ற எண்ணத்துடன்; எல்லாக்காரியங்களை மேற்கொள்பவராகவும் ,தமது சொல் மற்றும் செயல்களில் உண்மையாளராகவும் இருந்தால் அவர் ஜாஹிலிய்யா (அறியாமைக்) காலத்தில் செய்த பாவகாரியங்களுக்காக விசாரிக்கப்படமாட்டார். யார் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றதன் பின் நயவஞ்சகனாக, அல்லது இஸ்லாம் மார்க்கத்தை துறந்து சென்று, இஸ்லாத்தை துவம்சம் செய்யும் முகமாக நடந்து கொள்கிறானோ, இவ்வாறான ஒருவன் இஸ்லாத்தை ஏற்காதிருந்த போது செய்தவற்றிற்காகவும், இஸ்லாத்தை ஏற்றதன் பின் செய்தவைகளுக்காகவும் மறுமையில் விசாரிக்கப்படுவான்!
பிரிவுகள் : இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை · பெயர்களும் தீர்ப்புகளும் · இஸ்லாம் · நம்பிக்கை அதிகரித்தலும் குறைதலும்