ஒருவனிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவன் என் மீது ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால்.(அவன் நா…
Islam > Ta > Hadith > பரரததனகள தகரகளன சடடஙகள > ஒருவனிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவன் என் மீது ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால்.(அவன் நா…
ஹதீஸ் அறிவிப்பவர்: இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: ஒருவனிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவன் என் மீது ஸலவா…
ஹதீஸ் விளக்கம்: ஒருவனிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவன் என் மீது ஸலவா…
நபி ﷺ அவர்கள், மூன்று வகை மனிதர்கள் மீது இழிவு, அவமானம் மற்றும் நாசம் போன்றவற்றின் அடையாளமாக அவர்களின் மூக்குகள் மண்ணில் ஒட்டப்பட வேண்டும் என்று அவர்களுக்கு எதிராக துஆ செய்தார்கள்: முதல் வகையினர் : நபி ﷺ அவர்களின் பெயர் கூறப்படும் போது, 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' அல்லது அதற்குச் சமமான ஸலவாத்தை சொல்லாமல் விட்டவர். இரண்டாவது வகை: ரமழான் மாதத்தை அடைந்தும், நல்ல வழிபாடுகளில் அலட்சியம் காட்டியதினால், அந்த மாதம் முடிவடையும் முன் அவருக்கு மன்னிப்பு கிடைக்காமல் போனவர். மூன்றாவது வகை: ஒருவர்; முதுமையை அடைந்த பெற்றோர்களை பெற்றிருந்தும், அவர்களுக்குச் செய்த நோவினை மற்றும் அவர்களின் உரிமைகளில் செய்த அலட்சியம் காரணமாக, சொர்க்கத்தில் நுழைவதற்கான தகுதியை இழந்தவர்.
பாடங்கள்: ஒருவனிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவன் என் மீது ஸலவா…
- இமாம் ஸின்தி ரஹ் கூறுகிறார்: இம்மூன்று வகையினரிலும் ஒவ்வொருவருக்கும், தங்களிடமிருந்து குறைபாடு இல்லாமல் இருந்திருந்தால், மிகுந்த நன்மையைப் பெறக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர்கள் அலட்சியம் செய்ததால், அந்த நன்மை அவர்களிடமிருந்து தவறி விட்டது ஆகவே அவர்கள் தோல்வியடைந்து நஷ்டமடைந்து போனார்கள்.
- நபி ﷺ அவர்களின் பெயர் கூறப்படும் ஒவ்வொரு முறையும், அவர்கள்மீது ஸலவாத்து (பிரார்த்தனை) சொல்ல வேண்டும் என்று ஊக்குவித்தல்.
- ரமழான் மாதத்தில் வழிபாடுகளில் அதிக முயற்சி எடுத்து, முழு ஈடுபாட்டுடன் உழைக்க வேண்டும் என்று ஊக்குவித்தல்.
- பெற்றோர்களுக்கு நன்மை செய்வதில் (பிர்ருல்-வாலிதைன்) முழு முயற்சி எடுக்கவும், குறிப்பாக அவர்கள் முதுமையை அடையும் போது, அவர்களை மதித்து மரியாதை செய்யவும் ஊக்குவித்தல்.
பிரிவுகள் :
பிரார்த்தனைகள் திக்ருகளின் சட்டங்கள்
· அவ்வப்போது நிகழும் நிகழ்வுகளுக்கான திக்ருகள்
· சிறப்புக்களும் ஒழுக்கங்களும்
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
لا إله إلا الله
Pas de divinité sauf Allah