'ஆதமின் மகனே, நீ என்னிடம் பிரார்த்தித்து, என்மீது எதிர்பார்ப்பு வைத்திருக்கும் காலமெல்லாம்…

Islam > Ta > Hadith > இஸலமயஅடபபடக களக > 'ஆதமின் மகனே, நீ என்னிடம் பிரார்த்தித்து, என்மீது எதிர்பார்ப்பு வைத்திருக்கும் காலமெல்லாம்…

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்

நம்பகமானது (ஹஸன்)

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: 'ஆதமின் மகனே, நீ என்னிடம் பிரார்த்தித்து, என்மீது எதிர்…

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: يَا ابْنَ آدَمَ إِنَّكَ مَا دَعَوْتَنِي وَرَجَوْتَنِي غَفَرْتُ لَكَ عَلَى مَا كَانَ فِيكَ وَلاَ أُبَالِي، يَا ابْنَ آدَمَ لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنَانَ السَّمَاءِ ثُمَّ اسْتَغْفَرْتَنِي غَفَرْتُ لَكَ، وَلاَ أُبَالِي، يَا ابْنَ آدَمَ إِنَّكَ لَوْ أَتَيْتَنِي بِقُرَابِ الأَرْضِ خَطَايَا ثُمَّ لَقِيتَنِي لاَ تُشْرِكُ بِي شَيْئًا لأَتَيْتُكَ بِقُرَابِهَا مَغْفِرَةً».

ஹதீஸ் விளக்கம்: 'ஆதமின் மகனே, நீ என்னிடம் பிரார்த்தித்து, என்மீது எதிர்…

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹதீஸ்குத்ஸியில் அல்லாஹ் கூறியதாக அறிவிக்கிறார்கள்; ஆதமின் மகனே : நம்பிக்கை இழக்காது நீ என்னிடம் பிரார்த்தித்து எனது கருணையை எதிர்பார்த்திருக்கும் காலமெல்லாம் உனது பாவத்தை எவ்விதப்பொருட்படுத்தலுமின்றி மன்னிப்பேன் அந்தப் பாவம் அல்லது குற்றம் பெரும்பாவங்களில் ஒனறாக இருப்பினும் சரியே. ஆதமின் மகனே! உனது பாவம் வானம் பூமி நிறையும் அளவுக்கு அதிகமாக காணப்பட்டு அதற்காக என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அதன் அதிகத்தை பொருட்படுத்தாது உமது எல்லா பாவத்தையும் மன்னிப்பேன்.

ஆதமின் மகனே! நீ எதையும் இணைவைக்காத நிலையில் ஏகத்துவவாதியாக வாழ்ந்து, மரணித்த பின் இந்தப் பூமி நிறைய பாவங்களுடன் தவறுகளுடனும் வந்தாலும் உமது பாவங்களுக்கும் தவறுகளுக்கும் நிகராக இப்பூமி நிறைய மன்னிப்பை வழங்குவேன். ஏனெனில் நான் மன்னிப்பு வழங்குவதில் தயாளன். நான் இணைவைப்பைத் தவிர அனைத்து பாவங்களையும் மன்னிக்கிறேன்.

பாடங்கள்: 'ஆதமின் மகனே, நீ என்னிடம் பிரார்த்தித்து, என்மீது எதிர்…

பிரிவுகள் : உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் · இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை · பாவமீட்சி · சிறப்புக்களும் ஒழுக்கங்களும் · வல்லமையும் கீர்த்தியும் மிக்க அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொள்ளல். · இறைதிருநாமங்கள் மற்றும் பண்புகளில் ஏகத்துவம்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.5 / 29.5
Illumination 97%
Nouvelle lune dans 13 jours
أستغفر الله Je demande pardon à Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56