'யாரேனும் என்னுடைய இந்த வுழூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்…

Islam > Ta > Hadith > பகஹம அதன அடபபடகளம > 'யாரேனும் என்னுடைய இந்த வுழூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்…

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்

சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: 'யாரேனும் என்னுடைய இந்த வுழூவைப் போன்று செய்து, பின்னர்…

عَنْ ‌حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ رضي الله عنه: أَنَّهُ رَأَى عُثْمَانَ بْنَ عَفَّانَ دَعَا بِوَضُوءٍ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ مِنْ إِنَائِهِ، فَغَسَلَهُمَا ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الْوَضُوءِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلَاثًا، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ كُلَّ رِجْلٍ ثَلَاثًا، ثُمَّ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ نَحْوَ وُضُوئِي هَذَا، وَقَالَ: «مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ غَفَرَ اللهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ».

ஹதீஸ் விளக்கம்: 'யாரேனும் என்னுடைய இந்த வுழூவைப் போன்று செய்து, பின்னர்…

உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வுழுசெய்யும் முறையை, அழகிய முறையில் தெளிவு படுத்தும் நோக்கில் செயன்முறை ரீதியாக கற்றுக் கொடுத்தார்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொண்டு வரக் கூறி அதனை தனது இருகைகளிலும் மூன்று முறை ஊற்றி கழுவிவிட்டு, பின்னர் தனது வலது கையை பாத்திரத்தினுள் இட்டு நீரை எடுத்து வாயிலிட்டு நன்றாக அந்நீரை சுலட்டி, பின்னர் அதனை வெளியே கொப்பளித்ததோடு, அதே நீரால் நாசினுள் இட்டு அதனை வெளியே சிந்தினார்கள். அதனைத் தொடர்ந்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின் முழங்கை உட்பட இரு கைகளையும் கழுவினார்கள். அதனைத் தொடர்ந்து ஈரக்கையால் தலையை ஒரு தடவை தடவினார்கள். பின்னர் கரண்டைக்கால் உட்பட இரு கால்களையும் கழுவினார்கள்.

உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வுழு செய்து முடிந்ததும் தான் வுழூச் செய்ததைப் போன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழூச் செய்ததை தான் பார்த்ததாக அவர்களிடம் தெரிவித்தார்கள். அத்துடன் அவர்கள்; வுழு செய்ததைப் போன்று வுழுசெய்து விட்டு தனது இரட்சகனுக்கு முன் நின்று உள்ளச்சத்துடன் மெய்நிலையில் - உள்ளத்தை ஓர்நிலைப்படுத்தியவராக இரண்டு ரக்அத்துக்கள் தொழுதால் அவரின் முழுமையான வுழுவிற்கும் தூய்மையான அவரின் தொழுகைக்கும் அல்லாஹ் அவரின் முன்சென்ற சிறுபாவங்களை மன்னித்து கூலி வழங்குகிறான் என்ற நற்செய்தியையும் குறிப்பிட்டார்கள்.

பாடங்கள்: 'யாரேனும் என்னுடைய இந்த வுழூவைப் போன்று செய்து, பின்னர்…

பிரிவுகள் : வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ் · சுத்தம் · பிக்ஹும் அதன் அடிப்படைகளும் · வுழூ · வுழூ செய்யும் முறை

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.5 / 29.5
Illumination 97%
Nouvelle lune dans 13 jours
أستغفر الله Je demande pardon à Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56