'செயல்கள் ஆறு வகையாகும், மக்கள் நான்கு வகையினர்: அந்த ஆறு விடயங்களில் இரண்டு உறுதியானவை. அ…

Islam > Ta > Hadith > பகஹம அதன அடபபடகளம > 'செயல்கள் ஆறு வகையாகும், மக்கள் நான்கு வகையினர்: அந்த ஆறு விடயங்களில் இரண்டு உறுதியானவை. அ…

ஹதீஸ் அறிவிப்பவர்: இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்

நம்பகமானது (ஹஸன்)

Mis à jour le 26 octobre 2026

📖 2 min de lecture

ஹதீஸ் மூல உரை: 'செயல்கள் ஆறு வகையாகும், மக்கள் நான்கு வகையினர்: அந்த ஆ…

عَنْ خُرَيْمِ بْنِ فَاتِكٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْأَعْمَالُ سِتَّةٌ، وَالنَّاسُ أَرْبَعَةٌ، فَمُوجِبَتَانِ، وَمِثْلٌ بِمِثْلٍ، وَحَسَنَةٌ بِعَشْرِ أَمْثَالِهَا، وَحَسَنَةٌ بِسَبْعِ مِائَةٍ، فَأَمَّا الْمُوجِبَتَانِ: فَمَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ مَاتَ يُشْرِكُ بِاللهِ شَيْئًا دَخَلَ النَّارَ، وَأَمَّا مِثْلٌ بِمِثْلٍ: فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ حَتَّى يَشْعُرَهَا قَلْبُهُ، وَيَعْلَمَهَا اللهُ مِنْهُ كُتِبَتْ لَهُ حَسَنَةً، وَمَنْ عَمِلَ سَيِّئَةً، كُتِبَتْ عَلَيْهِ سَيِّئَةً، وَمَنْ عَمِلَ حَسَنَةً فَبِعَشْرِ أَمْثَالِهَا، وَمَنْ أَنْفَقَ نَفَقَةً فِي سَبِيلِ اللهِ فَحَسَنَةٌ بِسَبْعِ مِائَةٍ، وَأَمَّا النَّاسُ، فَمُوَسَّعٌ عَلَيْهِ فِي الدُّنْيَا مَقْتُورٌ عَلَيْهِ فِي الْآخِرَةِ، وَمَقْتُورٌ عَلَيْهِ فِي الدُّنْيَا مُوَسَّعٌ عَلَيْهِ فِي الْآخِرَةِ، وَمَقْتُورٌ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَمُوَسَّعٌ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ».

ஹதீஸ் விளக்கம்: 'செயல்கள் ஆறு வகையாகும், மக்கள் நான்கு வகையினர்: அந்த ஆ…

செயல்கள் ஆறு வகைப்படும்.மனிதர்கள் நான்கு வகையினர் உள்ளனர் என நபியவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகின்றார்கள். ஆறு செயற்பாடுகள் பின்வருமாறு:

முதலாவது: யார் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காது மரணித்தால் அவனுக்கு சுவர்க்கம் கிடைக்கும்.

இரண்டாவது, அல்லாஹ்வுக்கு ஏதாவது ஒரு விடயத்தில் இணைவைத்த நிலையில் மரணித்தவருக்கு நிரந்தர நரகம் உண்டு.

இவைகள் இரண்டும் சந்தேகமின்றி உறுதியாக மறுமையில் நிகழக்கூடிய விடயங்களாகும்.

மூன்றாவது : செய்வதற்கு எண்ணிய நல்ல காரியம். யார் ஒரு நல்ல காரியததை செய்ய வேண்டும் என நிய்யத் வைத்து (மனதால் செய்யவேண்டும் என உறுதி கொள்ளல்)அவர் தனது நிய்யத்தில் அவருடைய உள்ளம் நிறைவாக உணரும் அளவுக்கு உண்மையாளராக இருந்ததை அல்லாஹ் அறிகிறான்.இவ்வாறு இருக்கையில் அந்த நல்ல காரியத்தை செய்வதற்கு தடையாக ஏதோ ஒரு விடயம் குறுக்காக அமையுமானால் அதற்கான பூரண கூலியை அல்லாஹ் அவனுக்கு எழுதி விடுகிறான்.

நான்காவது: செய்து முடிந்த ஒரு தீமை. யார் ஒரு தீமையைச் செய்கிறாரோ அவருக்கு ஒரு தீமை எழுதப்படுகிறது.

இந்த இரண்டு விடயங்களும் எந்த அதிகரிப்புமின்றி குறிப்பிட்ட செயலுக்குரிய ஒரே மாதிரியான கூலியைக் குறிக்கிறது.

ஐந்தாவது: ஒரு நற்செயலுக்கான கூலி அதைப்போன்று பத்தாக வழங்கப்படுகின்றமை. யார் ஒரு நன்மையான காரியத்தை செய்ய மனதால் நினைத்து அதனை செய்தும் விடுகிறார். அந்த நற்செயலுக்கு பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன.

ஆறாவது: ஒரு நற்செயலுக்கான கூலி 700 மடங்காக வழங்கப்படுகின்றமை. யார் ஒருவர் இறைவழியில் ஒரு விடயத்தில்; செலவு செய்கிறாரோ அதற்கான கூலி 700 மடங்காக எழுதப்படுகிறது. இது அடியார்கள் மீதான அல்லாஹ்வின் பேரருளும் பேருபகாரமுமாகும்.

மனிதர்கள் நான்கு வகையினர். அவர்களின் விபரம் பின்வருமாறு :

முதலாமவர்: உலகில் வாழ்வாதாரத்தை தாராளமாகப் பெற்றவர் மாத்திரமின்றி அவர் விரும்பிய விதத்தில் அதனை அனுபவித்ததவர்; மறுமையில் பெரும் நெருக்கடிக்குள் இருப்பவர் இவர் இறுதியாக செல்லுமிடம் நரகமாகும் அவர்தான் காபிரான -இறைவனை மறுத்துவாழ்ந்த –செல்வந்தன்.

இரண்டாமவர் : இவ்வுலக வாழ்வில்; வசதி ஏதுமின்றி மிக வறுமையில் இருந்தவர், என்றாலும் மறுமையில் செல்வச்செழிப்பில் இருப்பவர் இறுதியில் சுவர்க்கம் செல்பவர் அவர்தான் அல்லாஹ்வை நம்பி வாழ்ந்த ஏழை முஃமின்.

மூன்றாமவர்: இவ்வுலகிலும் மறுமையிலும் நெருக்கடிக்கு உள்ளானவர் அவர்தான் அல்லாஹ்வை நிராகரித்து வாழ்ந்த ஏழை.

நான்காமவர் : இவ்வுலகில் மறுமையிலும் செழுமையுடன் இருப்பவர் அவர்தான் அல்லாஹ்வை நம்பி வாழ்ந்த முஃமினான செல்வந்தர்.

பாடங்கள்: 'செயல்கள் ஆறு வகையாகும், மக்கள் நான்கு வகையினர்: அந்த ஆ…

பிரிவுகள் : வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ் · ஜகாத் · சிறப்புகள் · ஏகத்துவத்தின் மகிமைகள் · உள செயற்பாடுகளின் சிறப்புகள் · உடல் செயற்பாடுகளின் சிறப்புகள் · பிக்ஹும் அதன் அடிப்படைகளும் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும் · உபரியான தர்மம்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.5 / 29.5
Illumination 97%
Nouvelle lune dans 13 jours
حسبنا الله ونعم الوكيل Allah nous suffit, quel excellent protecteur

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56