'கிறிஸ்தவர்கள் மர்யமின் புதல்வரை (ஈஸாவை) அளவு கடந்து புகழ்ந்ததை போன்று என்னை நீங்கள் அளவு…
Islam > Ta > Hadith > இஸலமயஅடபபடக களக > 'கிறிஸ்தவர்கள் மர்யமின் புதல்வரை (ஈஸாவை) அளவு கடந்து புகழ்ந்ததை போன்று என்னை நீங்கள் அளவு…
ஹதீஸ் அறிவிப்பவர்: இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: 'கிறிஸ்தவர்கள் மர்யமின் புதல்வரை (ஈஸாவை) அளவு கடந்து பு…
عَن عُمَرَ بنِ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قال: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تُطْرُونِي كَمَا أَطْرَتِ النَّصَارَى ابْنَ مَرْيَمَ؛ فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا: عَبْدُ اللهِ وَرَسُولُهُ».
ஹதீஸ் விளக்கம்: 'கிறிஸ்தவர்கள் மர்யமின் புதல்வரை (ஈஸாவை) அளவு கடந்து பு…
கிறிஸ்தவர்கள் ஈஸா இப்னு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு செய்தது போல், ஷரீஆ வரைமுறையை மீறி தன்னை அளவு கடந்து புகழ்வதையும், அல்லாஹ்வின் பண்புகள், மற்றும் அவனுக்கே உரித்தான விஷேட செயல்களைக் கொண்டு வர்ணிப்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தடுத்தார்கள், அதே போன்று நபியவர்கள் மறைவானவற்றை அறிகிறார் என்று கருதுவது, அல்லது அல்லாஹ்வுக்கு நிகராக அவர்களிடம் பிரார்த்திப்பது போன்ற விடயங்களையும் இந்த ஹதீஸில் தடுத்துள்ளார்கள். பின்னர் அவர்கள் தான் யார் என்பதை பின்வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள். தான் அல்லாஹ்வின் அடியார்களில் ஒவருன், என்னை நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்று அழைக்குமாறு பணிக்கிறார்கள்.
பாடங்கள்: 'கிறிஸ்தவர்கள் மர்யமின் புதல்வரை (ஈஸாவை) அளவு கடந்து பு…
- புகழ்தல் மற்றும் மகிமைப்படுத்துதல்; ஆகிய விடயங்களில் ஷரீஆ வரையரையை மீறி செல்வதானது இணைவைப்பிற்கு வழிவகுக்கும் என்பதினால் கண்டிக்கப்பட்டிருத்தல்.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரித்த இந்த விடயம் எமது முஸ்லிம் சமூகத்தில் நிகழ்ந்து விட்டது. இதன் விளைவாக ஒரு பிரிவினர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிலும், இன்னொரு பிரிவினர் அஹ்லுல் பைத்தினரிலும், மற்றொரு பிரிவினர் அவ்லியாக்களிலும் அளவுகடந்து சென்றதினால் இணைவைப்பில் வீழ்ந்துள்ளனர்.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தன்னை அல்லாஹ்வின் அடியான் என வர்ணித்திருப்பது தான் அல்லாஹ்வால் இரட்சிக்கப்படுபவர் என்பதை தெளிவுபடுத்தவேயாகும். ஆகவே இரட்சகனின் பிரத்தியேக பண்புகளில் ஏதாவது ஒன்றை அவர்களுக்கு கற்பிப்பது கூடாது.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தன்னை அல்லாஹ்வின் தூதர் என வர்ணித்திருப்பது தான் அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்ட தூதர் என்பதை தெளிவுபடுத்துவதேயாகும். ஆகவே அவர்களை உண்மைப்படுத்தி அவர்களை பின்பற்றுவது கடமையாகும்.
பிரிவுகள் :
இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை
· வல்லமையும் கீர்த்தியும் மிக்க அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொள்ளல்.
· வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம்
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
سبحان الله
Gloire à Allah