'இறைநம்பிக்கை (ஈமான்) என்பது 'எழுபதுக்கும் அதிகமான' அல்லது 'அறுபதுக்கும் அதிகமான' கிளைகள் …

Islam > Ta > Hadith > இஸலமயஅடபபடக களக > 'இறைநம்பிக்கை (ஈமான்) என்பது 'எழுபதுக்கும் அதிகமான' அல்லது 'அறுபதுக்கும் அதிகமான' கிளைகள் …

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்

சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: 'இறைநம்பிக்கை (ஈமான்) என்பது 'எழுபதுக்கும் அதிகமான' அல்…

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ -أَوْ بِضْعٌ وَسِتُّونَ- شُعْبَةً، فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الْإِيمَانِ».

ஹதீஸ் விளக்கம்: 'இறைநம்பிக்கை (ஈமான்) என்பது 'எழுபதுக்கும் அதிகமான' அல்…

ஈமான் பல கிளைகளையும், பண்புளையும் கொண்டது எனவும் அது செயற்பாடுகள், நம்பிக்கைகள் மற்றும் வார்த்தைகள் போன்றவற்றை உள்ளடக்கியது எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவரகள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.

ஈமானின் பண்புகளில் மிகவும் உயர்ந்ததும் சிறப்புக்குரியதும் 'லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையாகும், அல்லாஹ் மாத்திரமே உண்மையான ஒரே கடவுளாவான், அவன் அனைத்து விடயங்களிலும் தனித்துவமானவன், வணங்கி வழிபட ஏனைய அனைத்தை விடவும் மிகத் தகுதியானவன் என பொருளறிந்து கூறி, அது கூறும் கருத்தின் அடிப்படையில் செயல்படுவதாகும்.

மனிதர்கள் செல்லும் பாதையில் அவர்களுக்கு தொந்தரவு செய்யக்கூடியவற்றை அகற்றி விடுவது ஈமானின் ஆகவும் குறைந்த –தாழ்ந்த- நிலையில் உள்ள செயற்படுகளில் ஒன்றாகும்.

அதனைத் தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நாணம் -வெட்கம் ஈமானின் பண்புகளில் ஒன்று எனவும் குறிப்பிடுகிறார்கள், ஹயாஉ –நாணம்- என்பது அசிங்கமானதை கைவிட்டு அழகிய செயலை தூண்டும் ஒரு குணமாகும்.

பாடங்கள்: 'இறைநம்பிக்கை (ஈமான்) என்பது 'எழுபதுக்கும் அதிகமான' அல்…

பிரிவுகள் : இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை · பெயர்களும் தீர்ப்புகளும் · நம்பிக்கை அதிகரித்தலும் குறைதலும்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.6 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
اللهم صل على محمد Ô Allah prie sur Muhammad

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56