பெருந்தொடக்கிற்காக குளிக்கும் முறை

Islam > Ta > Hadith > வணககவழபடடகள சமபநதமன பகஹ > பெருந்தொடக்கிற்காக குளிக்கும் முறை

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்

சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: பெருந்தொடக்கிற்காக குளிக்கும் முறை

ஹதீஸ் விளக்கம்: பெருந்தொடக்கிற்காக குளிக்கும் முறை

பெருந்தொடக்கிற்கான நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் குளிப்பின் முறை குறித்து உம்முல் முஃமினீன் மைமூனா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது மைமூனா ரழி அவர்கள்; நபியவர்களுக்கு குளிப்பதற்கான நீரை வைத்துவிட்டு ஓரு துணியினால் மறைத்து விட்டார். அவ்வேளை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் விடயங்களை செய்தார்கள் :

முதலாவது : கையை பாத்திரத்தினுள் இடுவதற்கு முன் அவர்கள் தனது இரு கைகளையும் நீர் ஊற்றிக் கழுவியமை.

இரண்டாவது : ஜனாபத்தின் விளைவால் படிந்திருப்பவற்றை சுத்தம் செய்யும் வகையில், வலது கையினால் இடது கையில் நீரை வார்த்து தனது மர்ம உறுப்பைக் கழுவினார்கள்.

மூன்றாவது : கையில் படிந்துள்ள அசுத்தத்தை நீக்குவதற்காக இரு கைகளையும் தரையில் படர்த்தி தேய்த்துவிட்டு பின்னர் கழுவினார்கள்.

நான்காவது : வாயில் நீர்விட்டு நன்றாக அலசி விட்டு அதனைக் கொப்பளித்தார்கள். அத்துடன் நாசுக்கும் நீர் செலுத்தி அதனையும் வெளியேற்றினார்கள்.

ஜந்தாவது: முகத்தையும் இரு முழங்கைகளையும் கழுவினார்கள்.

ஆறாவது: தலைக்கு தண்ணீர் உற்றினார்கள்.

ஏழாவது: உடலின் ஏனைய பகுதிகளுக்கு நீர் ஊற்றினார்கள்.

எட்டாவது: தான் குளித்த இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து தனது இரு கால்களையும் கழுவினார்கள்.

பின்னர் மைமூனா (ரழி) அவர்கள் துடைப்பதற்காக ஒரு துண்டுத்துணியை எடுத்துக் கொடுக்க அதனை நபியரவர்கள் எடுக்காது தனது கையால் நீரை துடைத்ததோடு அதனை உதரலானார்கள்.

பாடங்கள்: பெருந்தொடக்கிற்காக குளிக்கும் முறை

பிரிவுகள் : வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ் · சுத்தம் · பிக்ஹும் அதன் அடிப்படைகளும் · குளிப்பு

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.5 / 29.5
Illumination 97%
Nouvelle lune dans 13 jours
اللهم صل على محمد Ô Allah prie sur Muhammad

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56